பக்கம்:அந்தமான் கைதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கொண்டேன். நான் ஏழை. நீ என்னை மறந்தது இயற்கையே. நான் இதற்குத் தடையாக இருப்பேன் என்று எண்ணாதே. யாவும் விதியின் திரு விளையாடல், இக்கடிதம் உன் கைக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என் கடமையை நான் செய்துவிட்டேன். என்னை மறந்துவிடு. ஆனால்! உன்னால் நான் வஞ்சிக்கப் பட்டேன் என்பது மட்டும் ஞாபக மிருக்கட்டும்! வருகிறேன்.
வந்தனம்,
பாலு


(கடிதத்தைப்படித்து பிரமித்து நின்றுவிடுகிறாள். கண்ணீர் பெருகுகிறது. பீறிட்டு வரும் அழுகையையும் ஆத்திரத்தையும் துணியை வாயில் வைத்து அடக்கிக்கொண்டு சோர்ந்து வீழ்ந்து மெள்ளத் தடுமாறிக் கொண்டே எழுந்து)

என் அன்பே! இந்த உலகில் என்னை நேசிக்கும் உள்ளம் படைத்தவர் இருவர். ஒருவர் என் அண்ணன், மற்றொருவர், நீங்கள். அவர் அயல்நாடு சென்று விட்டார். நம்பிப் பயனில்லை. நம்பியிருந்த தாங்களும் உண்மையறியாமல் என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இனி எனக்குப் புகலிடம் எதுவுமில்லை. விடிந்தால் வேறொரு கிழட்டு மிருகத்திற்கு இறையாக்கப்படுவேன். வேண்டாம் வேண்டாம். அதை விட எனக்கு இனியது சாவு! முன்பு எங்கள் காதலை வரவேற்றதும் வளர்த்ததும் இந்தக் கிணறுதான். இப்போது என் சாதலை வரவேற்பதும் இந்தக் கிணறு தான். ஆமாம் ஆமாம். இந்த உலகில் எனக்குப் புகலிடம் வேறு எங்குமே இல்லை. இந்தக் கிணறுதான். (பைத்தியம் போல் அலறிக்கொண்டு கேணியில் விழப்போகிறாள்; இடி முழக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/87&oldid=1072289" இலிருந்து மீள்விக்கப்பட்டது