பக்கம்:அந்தித் தாமரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2

5

அக்கணம் அங்கே இன்னொரு வதனம் தெரிந்தது! -'அஞ்சலை!’

இரண்டு எட்டுத் தள்ளி ஒதுங்கினுன் சுப்பன்: வேலாயி இடுப்புக் குடத்தைப் பத்திரமாகப் பற்றிய வாறு குனிந்து குடிசைக்குள் நுழைந்தாள்.

சில்லுச்சில்லாக உடைந்து கிடந்த மண் பானையின் உருவைக் காண முடியாமல் தவித்தாள் அஞ்சலை.

“ஏலே அஞ்சலே, இங்கிட்டாலே பாருவேன்! என்று. தூண்டில் முள் வீசினன் சுப்பன். தீனி, பார்வையின் நோக்கில் இருக்காதா, என்ன?

பூவரச மரத்தின் கவ்வல் கிளையிலிருந்து துணி முடிச்சு வெளியே வந்தது. உறையூர் நெசவில் பதினறு முழப்புடவைகள் இரண்டு காணப்பெற்றன!

“ஒண்னு ஒனக்கு இ ன் .ெ ஞ ண் ணு எங்க வேலாயிக்கு என்றன் சுப்பன். அவன் குரலில்தான் எத்துணை ஆனந்தம், குழைவு !

அஞ்சலை உயிர்ச்சிலையானள்; வரவழைக்கப்பட்ட சிரிப்பில் ஜீவன் இருக்கமுடியாதல்லவா?

‘வா புள்ளே: அவள் கின்றுகொண்டேயிருந்தாள். எங்க வேலா யிக்கு:-புடவையின் உரிமைக்கு வழங்கப்பட்ட சாசனப் பத்திரமா அவ் வார்த்தைகள்?

ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தாள் அஞ்சலை. நினைவுகள் தசாவதாரம் எடுத்தன.

அ முடித்த பூவையை மணம் முடித்தான் பூப் போன்ற புன்னகைக்குப் பொருளானுன். சுப்பனும் அஞ்சலையும் தம்பதிகளாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/127&oldid=619575" இலிருந்து மீள்விக்கப்பட்டது