பக்கம்:அந்தித் தாமரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164


கண்ணுச்சாமி அம்பலத்துக்கு கீ கொடுக்க வேண்டி கடனே நானே அடைச்சுப்பிடறேன்!” என்று கூறினன் சின்னேயா, -

வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்துவந்த பூவம்மா தந்தையின் கைகளைப் பற்றிக்கொண்டு, “இப்பத்தான், சாமி என் அப்பாவுக்கு கல்லபுத்தி தந்திருக்காரு!’ என்று குதித்தாள்.

பெற்ற மணி வயிறு மகிழ்ந்தது. “பூவம்மா!’ என்று விம்மினன் சின்னேயா. “சின்னையா மச்சான், இன்னிக்கு உள்ளதுபோல நீங்க என்னிக்கும் எங்க பேரிலே பாசம் வச்சிருக்தாப் போதும்; காசு பணம் வேணும்! ...கான் பட்ட கடனை கான் அடைச்சுப்பிடுவேன், பிராமிசரிப் பத்திரம் எரிஞ்சா என்ன?...நான் எரிய8லயே!...சரி, நாங்க போயிட்டுவாரோம்! ...மருமகப் பொண்ணே, காங்க போயிட்டு வாரோம்மா!...”

ஒரு விடிை பூவம்மாவுக்கு வெட்கம் வந்துவிட்டது. “மாமா! இருங்க போகலாம்!” என்று உள்ளே சென்று திரும்பினுள் சிறுமி. “ஐயோவ்!” என்று விளித்தவாறு கண்ணுச்சாமி அம்பலத்தை அண்டினுள் பூவம்மா. ‘ஐயா, இந்தாங்க உங்க நோட்டு’ என்று கூறி, கடன் பத்திரத்தை அவரிடம் நீட்டினுள். சிரிப்பு விளையாடி யது பூவம்மாவின் முகத்தில்.

கண்ணுச்சாமி அம்பலம் புன்னகையை விடாமல், கையிலிருந்த புரோநோட்டைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தார்; “பிரமன், எனக்கும் புத்தி தெளிஞ் சிடுச்சு; உன் மனசை அறிஞ்சவன் கான். அப்பாலே எதுக்கு இந்த கோட்டு?’ என்றார் அவர்.

உணர்ச்சி வசப்பட்டு கின்றன் பிரமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/166&oldid=1273136" இலிருந்து மீள்விக்கப்பட்டது