பக்கம்:அந்தித் தாமரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


‘அம்மா, கலெக்டர் லார் ரொம்ப-ஊஹூம் ரொம்ப ரொம்ப கல்லவர். அவர் என் பேரிலே எவ்வளவு பிரியம் வச்சிருக்கார் தெரியுமா? கேற்றைக்கு படம் பார்த்திட்டு வந்ததும், அவர் பங்களாவுக்கு இட்டுக் கிட்டுப் போனர். சமையல்காரன் பெரிய விருந்தே வச்சுப்பிட்டான். என்னே அங்கேயே ராத்திரிக்குத் தங்கச் சொன்னர். கான் இல்லாம அம்மாவுக்குத் துக்கம் வராதுன்னு சொன்னதும், அவரே என்னைக் காரிலே கொண்டாக்து விட்டார். அவர் என்னைப் பெரிய படிப்பு வரைக்கூட படிக்க வைக்கப் போளுராம். அம்மா, கடவுள் கம்ப பேரிலே கொஞ்சமாச்சும் கருணை வச்சிருக்கணும். இல்லாப்போனு, இத்தனை காள் கழித்து நமக்கு உள்ள இந்த சொந்தக்காரரையாச்சும் கம்ப கண்ணிலே காட்டியிருப்பாராக்கும்?... ஆமா, என்னைக் கண்டதும் ஏம்மா அப்படி அவருக்குக் கண்னெல்லாம் கலங்கிப் போகுது? பாவம், என்னைப்போலே அவருக் கும் ஒரு பாப்பாவைக் கடவுள் கொடுத்துட்டா அவர் மனசு சந்தோஷப்படுமில்லையா? அவர் மனைவிகூட இன்னும் ரெண்டு மாசத்திலே வந்துடுவாங்களாம். கம்ப ரெண்டு பேரும்போய் அவங்களைக் கூட்டி வந்து ஒரு விருந்து பண்ணிப் போடணும். கலெக்டர் ஸாரை காம் மறக்கவே முடியாது பார்த்தியா, மறந்துப் புட்டேன். நான் விற்ற பாவை விளக்கை எப்படியோ துப்புக்கேட்டு அவரே பணம் கொடுத்துத் திருப்பி என்கிட்டேயே தங்துவிட்டார். இது கைராசி விளக்கு...’ என்று மூச்சுக்கூட விடாமல் சொல்லி முடித்துவிட் டாள் சூடாமணி-அன்று இரவில். ... . . . . . . . . .”

விதரனை புரியாத பெரியவர்கள் மாதிரி ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் வைத்துப்பேசிய தன் மகளின் பேச்சு ஒவ்வொன்றும் ரம்பமாக உருக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/24&oldid=1273048" இலிருந்து மீள்விக்கப்பட்டது