பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

111


அரசியலுக்கு அப்பாற்பட்ட பெண் பிறவி என்றல்லவா என்னை நினைத்து விட்டார் அப்பா!’ என்று தனக்குத்தானே மனம் நொந்தாள். அழகண்ணலைத் தான் சந்திக்க விழைவது பற்றிச் சேதி கொடுத்தனுப்பி சேடியைப் போய்வரச் சொல்லியிருந்தாள். அவரும் இணக்கம் காட்டியிருந்தார். ஒருவேளை, தன்னைக் காணவே தான் அமைச்சர் வருகிறாரோ என்று கூட பரபரப்பு எழுந்தது. ‘கூத்தரங்கு’க்குத் தோழியுடன் செல்ல வேண்டுமென்ற திட்டம் மாறியது.

ஆம்; அவள் கருத்து மெத்தச் சரியே.

அமைச்சர் தலைவர் அரசகுமாரியைத்தான் காண வந்திருந்தார்.

‘அரண்மனையின் ரகசியங்கள்’ என்ற அபாய அறிவிப்பில் தன் தந்தையின் மதிமயக்கத்தையும் இணைத்துவிட அவள் ஒப்பவில்லை. தனிப்பட்ட மனிதர் அல்லர் மன்னர். அவர் பொதுவானவர். ஆகவே, இதில் யாருக்கும் எப்போதும் சுயநலப் பண்புக்கே இடம் கிடையாது அவளுக்கும் இது பொருந்தும்! அதனால்தானே ரகசியமாக அவளும் பிரத்யேகமாக படைப்பயிற்சி பெற்றாளோ?

முதல் அமைச்சர் அழகண்ணல் வந்தார். இளவரசியைச் சந்தித்தார். பேசினார். அவள் நாதசுரபியைப் பற்றிய விஷயங்களை வெளியிட்டாள். கடந்த சில தினங்களாக அவளுடன் தான் நெருக்கமாகப் பழகியபோது, ஓரளவு யூகிக்க முடிந்த சிற்சில சமாசாரங்கள் குறித்தும் பேசினாள்.

எல்லாவற்றையும் தீரக் கேட்டுக் கொண்டிருந்தார் தலைமை அமைச்சர்.“இளவரசி உங்களுக்கு நாட்டினிடத்திலும் உங்களைப் பெற்றவரிடத்திலும் இயல்பாக ஏற்பட்டுள்ள கவலையும் பாசமும், இருநிலைக் கெளரவமும் காக்கப்பட வேண்டுமென்கிற பெருந்தன்மையும் எனக்கு நிரம்பவும் மகிழ்வையூட்டுவதாக இருக்கின்றன. ஆனால் முதன்முதலில் ஒன்று உங்களுக்குச் சொல்ல