பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை



அனுபவங்கள் தான் ஒருவரை அறிவுடையவராக மாற்றுகின்றன. ஆற்றல் உடையவராக ஏற்றுகின்றன.

அந்த அனுபவங்கள் எந்தத் தன்மையானதாக இருந்தாலும் தனது முன்னேற்றத்திற்கான உரங்களாகப் பயன்படுத்திக் கொள்கின்றவர்களே முன்னேற்றத்திற்காக முனைபவர்கள் ஆவார்கள்.

ஓர் உடற்கல்வி இயக்குநராகப் பணியினைத் தொடர்ந்த போது, 'பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவுமா என்ற பழமொழிக்கு ஏற்பவே என் வாழ்க்கை அமைந்திருந்தது.

எழுத்தே என் வாழ்கை என்ற சூழ்நிலை அமைந்து காரைக்குடி கல்லூரிப் பணியினைத் துறந்து, ராஜினாமா செய்துவிட்டு, சென்னைக்கு வந்தபோதுதான் ‘எனது நிலைமை’ புரிந்தது.

பள்ளியில் பணியாற்றி விட்டு, சென்னை டி. வி. எஸ். நிறுவனங்களில் விளையாட்டு அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, எனது நிலைமை இன்னும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.