பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


தற்காலம்

சம்பிரதாயம் என்பது தொன்று தொட்டுத் தொடர்ந்து வருகிற வாழ்க்கைமுறை. ஏனென்று தெரியாமலேயே எல்லாவற்றையும், விடாப்பிடியாக, முடிந்தவரை கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொண்டு பின்பற்றி வாழும் வாழ்க்கை சோதனை அப்பியாசம்.

செளகரியம் என்பது வேண்டிய இடத்தில் வேண்டியவாறு, இருந்தோ விலகியோ, மேற்கொண்டு செய்யும் முறையாகும்.

சம்பிரதாயத்தைப் பின்பற்றும் பொழுது செளகரியத்தைப் பார்க்க முடியாது. செளகரியத்தை நினைத்தால், சம்பிரதாயம் அடிபட்டுப் போய் விடும் சம்பிரதாயத்துக்கும் செளகரியத்துக்கும் உள்ள போராட்டம்தான் பழமைக்கும் நவீன காலத்துக்கும் உள்ள போராட்டமாக இப்பொழுது, வெற்றி பெறுவது செளகரியமாகத்தான் ஆகிவிட்டது.

Ο O O

உண்மையான பக்தி

உண்மையான பக்தி சொல்லித் தெரிவிக்க வேண்டிய அவசியமேயில்லை. அவர் செய்கின்ற செயல்களை வைத்தே உண்மையான பக்திமானை அறிந்துகொள்ள முடியும். பக்தி நெறி ஓதி விட்டு விடுவது அல்ல. ஒதி ஒழுகி நிற்பது.

Ο O O