பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அனைத்துலக மனிதனை நோக்கி ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக, வெளிநாட்டுச் சரக்குகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என்று பலரும் அறியச் சொல் கின்ற அளவுக்கு நாம் தைரியத்தைப் பெற்றுவிட்டோம். பல்வேறு கண்டுபிடிப்புகளைப் போல, இந்தக் கண்டுபிடிப்பும் ஒரு குறிப்பிடட அனுபவத்தின் மூலம் பிறந்ததாகும். இதைப்பற்றிச் சிந்திக்கும்பொழுது எந்த ஒரு சந்தர்ப்பம் காரணமாக இக் கண்டு பிடிப்புக் கிடைத்ததோ, அந்தச் சந்தர்ப்பத்தைவிட இந்தக் கண்டு பிடிப்பு மிகப் பெரியது என்பதையும் உணரத் தொடங்கிவிட்டோம். இந்தக் கண்டு பிடிப்பில் சக்தியும், செல்வமும் அடங்கி இருக் கின்றன வென்பதையும் உணர்ந்தோம். வெளிநாட்டுப் பொருள் கள் பகிஷ்காரம், பிறரைத் துன்புறுத்துவதற்காகமட்டு மன்று : நம்மை வலுப்படுத்திக் கொள்ளவும் தேவைப்படக்கூடிய ஆயுதம் என்பதையும் உணர்ந்துவிட்டோம். இதனுல் வேறு பயன் ஏதேனும் விளங்தாலும் விளையாவிட்டாலும், உடனடியாக ஓர் உணர்வை காம் பெறுவதற்கு இது இடம் தந்து விட்டது. நம்முடைய சக்தியை காம் உணரும்ாறு செய்த இந்த விழிப் புணர்ச்சி, ஒரு புதிய மனேவலிமையால் ஏற்படும் மகிழ்ச்சியை நமக்குத் தந்துள்ளது. இந்த மகிழ்ச்சி இல்லையாளுல், பிற நாட்டுப் பொருள்களைப் பகிஷ்காரம் செய்வதால் நமக்கு ஏற்படுகின்ற துன் பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. கோப உணர்ச்சி, நீண்ட நாளைக்கு கிலேபெற்றிருப்பதில்லை. இன்னுஞ் சொல்லப் போனல், வலிமையுடைய அதிகாரத்தின் எதிரே வலிமை யற்றவர்களுக்குத் தோன்றும் கோப உணர்ச்சி கிலேத்து கிற்கவே முடியாது. நாம் எவ்வளவுக் கெவ்வளவு துயரம் அனுபவிக்கிருேமா, அவ் வளவுக் கவ்வளவு உண்மையையும் உணரத் தொடங்கி விட்டோம். நம்முடைய துயரம் மிகுதிப்படுவதனுல் கம்முடைய வலிமை, உர மும், உறுதியும் பெறுகின்றது. துன்பம் காரணமாகப் பெறப்பட்ட இந்த அனுபவம் மிக விரும்பத் தகுந்ததும், கம்மோடு கலந்துவிட்டது மான ஒரு சிறந்த உதாரணமாக அமைந்து விடுகிறது. துயரதி கொண்டிருக்கின்ற நேரத்தில் பெறுகின்ற قله آدات زناسسیله ندا آتات ننا نگذ آن د رین உணர்ச்சிகள், பிறகு மாற்றப்பட முடியாதவை. துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதற்கு நமக்கு எவ்வளவு சக்தி உண்டென்பதை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு முத்திரையாகும் இது. துன்பத்தைப் பொறுக்கும் இந்தச் சக்தியை மேலும் வளர்ப்பதன் மூலம் எத்தகைய துயரத்தையும் நாம் பொறுத்துக் கொள்ள முடியும்.