பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 அனைத்துலக மனிதனே நோக்கி உதவ முன் வந்தனர். பிற இடங்களில் உள்ள உணவு விடுதி களில் வாழும் பிள்ளைகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருப்பதை விட அதிகப்படியாக வேண்டுமெனக் கூச்சலிடுகின்றனர்; ஆளுல், இந்தப் பிள்ளைகள் விருப்பத்துடன் தங்கள் தேவைகளை எளிதாக ஆக்கிக்கொள்கின்றனர். ஒரு வகையான பொறுப்பு உணர்ச் சியை அவர்கள் வளர்த்துள்ளனர். குறைகள் ஏற்படும்பொழுது முணங்குவதற்குப் பதிலாக அதுபற்றி ஆராய்ந்து எவ்வாருே சரிப் படுத்திக்கொள்கின்றனர். உணவை வளப்படுத்த வேண்டுமானுல் அவர்கள் காய்கறித் தோட்டத்தில் அதிகப்படியான ஊக்கங் காட்டவேண்டும். அதில் அவர்கள் தக்க பயனப் பெருவிடினும் கூட, அந்த முயற்சிக்கு ஒரு மதிப்புண்டு; அந்த மதிப்பைச் சங்தை விலை நிலவரத்தால் அளவிடக் கூடாது. - இந்த விளக்கத்தை இன்னும் கலே யழகுபடுத்திக் கூற வேண்டும் என்பதற்காகவே எங்களுடைய திட்டத்தில் ஏதேனும் தோல்வி ஏற்பட வேண்டுமென்று கினைக்கிறேன். எங்களுடைய நிரல்பட கோக்கப்பட்ட வேலை முறையில் பொருத்தமில்லாத ஒன்று புகுந்து அதனைக் கலைக்க முயலவேண்டும். இதுவரை அத்தகைய எதுவும் நிகழவில்லை என்பதை அறிவித்துக் கொள்கிறேன். கம் முடைய உஷ்ணப் பிரதேச தட்ப வெப்ப கிலே காரணமாகப் போலும் பொருள்களே கிலே குலையச் செய்ய விரும்பும் அதிகப்படியான ஆற்றல் கம்மிடம் காணப்படவில்லை, நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பரிசோதனை குற்றமற்ற பிள்ளைகட்கு ஒரு சுவர்க்கம் போன்றதன்று என்று கூறிவிடுவதற்குக்கூட் காலங் கடந்துபோய் விடவில்லை. எங்களுடைய கொள்கைகளையும், இலட்சியத்திலுள்ள நம்பிக்கையையும் சோதனைக் குள்ளாக்கும் முறையில் விரைவில் தீர்வு காண முடியாத பிரச்னைகள் தோன்றக் கூடும் என்று உறுதியாக நம்புகிறேன். - வாழ்வின் அன்ருடத் தேவைகட்கு மனத்தையும் உடம்பையும் இணையச் செய்யும் பயிற்சியை அளித்த பிறகு, அதன் பயனுக ஏற்பட்ட அறிவு விழிப்பைக் கண்டபிறகு, எங்கள் பள்ளிக்கட்டத் தில் தொடக்க நிலப் பிள்ளைகட்கும்கூட, இந்த முறையைக் கையாளலாம் என்ற துணிவு பிறந்தது. அந்தப் பிரிவின் குழந்தை களும் அவர்கட்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் காமும் கற்றுக்கொள்கிருேம் என்று கம்பும் அதன் இலட்சிய ஆசிரியரும், தாங்களாகவே ஒரு குடிசையைக் கட்டி முடித்து அதன் பயனுகப் பெருங் கர்வம் பாராட்டி வருகின்றனர். வாழ்கையின் வீரச்