பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔4 முன்னுரை டாமல் தடை செய்யப்பட்டால் உலகம் துன்பமடையும். ஹிந்துப் பல்கலைக் கழ்கம்’ என்ற கட்டுரை கல்விப் பிரச்னையைப் பேசுவ துடன், இந்தியாவின் கற்காலம் அதில் வாழும் பல்வேறு மக்களின் ஒற்றுமையில் இருக்கிறதே தவிர, அவர்களனைவரையும் சம நிலைப் படுத்துவதால் அப்பயன் வினேயது என்ற தாகடரின் கம்பிக்கையை மறுமுறையும் எடுத்துக் கூறுகிறது. . தனிப்பட்ட நபர்களும், கூட்டத்தாரும் தம் கருத்துக்களை வெளி யிடுவதால் பயன் விளயும் என்று நம்பிய தாகடர், இந்தியாவிற்குச் சாதி, சமயங் கடந்த ஒர் அரசியல் வேண்டுமென்றும், எல்லாச் சமயம், இனம், நம்பிக்கை ஆகியவற்றையும் கவனிக்கும் அரசாக அது அமைய வேண்டும் என்றும் கூறிய தேசத் தலைவர்களில் முதலா வதாக இருந்ததில் வியப்பொன்றுமில்லை. எந்த இடத்தில் தனிப்பட்ட நபர், கடிட்டம் ஆகியவர்களின் மதிப்புக்கு இடம் தரப்பட்டதோ, அங்கெல்லாம், அனைவருக்குமே பெரிதும் நலம் விளைந்துள்ள தெனத் தாகடர் நம்பினர். இக் கொள்கையைக் கடைப் பிடிக்காத நாடுகள் வறுமையுற்று, இறுதியில் தேசீயப் பண்பாட்டையும் செழிப்பையும் இழந்தன. இந்த நவீன உலகில், பல்வேறு துேங் களின் இடையே காணப்படும் வேற்றுமைகளே, ஒருவருக்கொருவ்ர் மதிப்புக் காட்டி ஏற்றுக் கொள்வதன் மூலமே, மனித சமுதாயம் முன்னேற முடியுமென்றும் அவர் கம்பினர். மனித வேற்றுமையின் நடுவே ஒற்றுமையை ங்ாடிச் செல்லும் தாகரின் இந்த இயல்பு உலகின் எல்லே வரை அவரைக் கொண்டு சென்றது. புத்தருடைய காலத்தில் ஏற்பட்ட இக்திய அறிவுப் பெருவளர்ச்சியின் பின்னர் இந்தியர்கள் தங்களுக்குள்ளேயே அடங்கிவிட முற்பட்டனர். இடைக் காலத்தில் மேற்கு ஆசியா வுடனும், பிறகு நவீன காலத்தில் ஐரோப்பாவுடனும் தொடர்பு ஏற் பட்டது உண்மைதான். கிறிஸ்து பிறந்த முதல் நூற்ருண்டின் பிறகு ஏற்பட்ட இத் தொடர்புகளில் இந்தியா வாங்கிக் கொள்ளும் நாடாக இருந்ததே தவிரக் கொடுக்கும் நாடாக அமையவில்லை. புது முயற்சிகளில் புகும் மனப்பாங்கு இந்தியர்களிடம் குறையத் தொடங்கியபொழுதே ஒழுக்கத் துறையிலும், அறிவுத் துறையிலும் வீழ்ச்சி ஏற்படும் அறிகுறிகள் தோன்றலாயின. இது பின்னர், பொருளாதார, அரசியல் துறைகளிலும் தோல்வியைக் கொணர்ந் தது. பல நூற்ருண்டுகள் வரை இந்தியர்கள் இந் நாட்டை விட்டு எங்கும் செல்லவில்லை. இந்தியர்களில் மிகப் பலர் காட்டை விட்டு வெளியே செல்வதால் சமுதாயத்தில் இழி சொல்லையும், சாதிக் கட்டுப்பாட்டையும் தண்டனையாகப் பெற்ருர்கள்.