பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயமும் அரசாங்கமும் 5.3 அரசியல் விடுதலைக்கு கம்முடைய முழு உழைப்பையும் கொடுக் காமல், சமுதாய சுதந்திரத்தை எப்பாடு பட்டாயினும் காப்பாற்று கிருேம். இங்கிலாந்தில் அநாதைகள் பராமரிப்பு முதல் சமயக் கல்வி வரை எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தின் உதவியை எதிர் பார்க்கிருர்கள் , ஆல்ை, கம்முடைய நாட்டில் மக்களின் கடமை உணர்ச்சியை நம்பியே இவை நடைபெறுகின்றன. எனவே, இங்கி லாந்து வாழ வேண்டுமானுல் அது தன் துரைத்தனத்தைக் காப்பாற்றித் தீர வேண்டும் ; நாம் வாழ வேண்டுமானல், சமுதாய உணர்ச்சியைப் பாதுகாக்க வேண்டும். இதன் காரணமாக, அரசாங்கத்தை விழிப்புடனும், தொழிற்படு முறையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது இங்கிலாந்தின் கடமையாகும். ஆங்கிலப் பள்ளிகளில் படித்த காரணத்தால், எல்லாச் சக்தர்ப்பங்களிலும் தொழிற்படுமாறு அரசாங்கத்தைத் தூண்டிக் கொண்டிருப்பதுதான் பொதுமக்கள்ன் முக்கியமான கடமை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். மற்ருெருவருடைய உடம் பில் கட்டுப் போடுவதால் கம்முடைய உடம்பிலுள்ள காயங்களே ஆற்றிக் கொள்ள் முடியாதென்ற உண்மையை ஏனே நாம் மறந்து விட்டோம் ! இக்கிலேயில் ஒரு விளுத் தோன்றக் கட்டும். பொதுக் கடமை களே, பொதுமக்கள் சமுதாயங்களிடம் விட்டு வைப்பது கலமா ; அன்றி, அரசாங்கம் என்ற ஒரு தனிப்பட்ட உறுப்பினிடம் ஒப்பு விப்பது கலமா என்பதே அந்த வின. இத்தகைய ஒரு விவாதம் விவாத அரங்குகளுக்கு ஏற்றதே தவிர, இங்கேரத்தில் நம்மைப் பொறுத்தவரை அது பயன் அற்றதாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் பொது மக்களின் கன்னம்பிக்கை என்ற பாறையின் மேல் கட்டப் பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும் , அன்றியம், இயற் கையான வழிகளில் அது வளர்ந்து வந்துள்ளது. வெஆம் விவா தத்தின் மூலம் அந்த கிலேயை நாம் அடைய முடியாது அது எவ்வளவு சிறப்புடையதாயினும் இன்றைய கிலேமையில் அது நம் பிடிக்கு அப்பாற்பட்டதாகும். கம்முடைய காட்டிலுள்ள அரசாங்கம் கம்முடைய சமுதாயத்துடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமையால், கமது சமுதாய அமைப்பில் எந்த இடத்தையும் பெற முடியாது. எனவே, அந்த அரசாங்கத்திடமிருந்து-காம் எதனை விரும்பினுலும் ஓரளவு உரிமை யைப் பறிகொடுத்துத்தான் வாங்க நேரிடும். அரசாங்கத்திடம் எந்தக் கடமைகளைச் சமுதாயம் ஒப்படைக்கிறதோ அந்தக் கடமை