பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அன்னை கஸ்தூரிபாயின்
ஓராண்டுக்குள் மீண்டும் சந்திப்போம் என்ற வாக்குறுதியைத் தந்து விட்டுப் போன காந்திக்கு தென்னாப்ரிக்கா அனுபவம், ஒரு சோதனைக் கூடமாக உருவெடுத்து விட்டது.

ஒரு வழக்கில் வாதாடிடச் சென்ற காந்தி, தென் ஆப்ரிக்கா சென்றதும் ஓர் அரசியல் வாதியாகும் நிலை எதிர்பாராமல் அவருக்கு ஏற்பட்டு விட்டது.

எந்த வழக்குக்காக அவர் உதவி செய்திடச் சென்றாரோ, அந்த வழக்கை அவர் சமாதானம் பேசி, சுமுகமாகத் தீர்த்து வைத்து விட்டதால் காந்திக்கு அங்குள்ள இந்தியர்கள் இடையே புகழ் உருவானது; நற்பெயரும் பெற்று விட்டார்.

அந்த நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றது. அவர்களால் இந்தியாவிலே இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் கூலிகள் என்றும், அடிமைகள் என்றும், சம உரிமைகளற்று இழித்துரைக்கப் படுவதைக் காந்தி நேரிலேயே கண்டார்; வேதனைப்பட்டார்; அந்த அவமானத்தை அவரும் இந்தியர் என்ற காரணத்தால் அனுபவிக்கும் இழிநிலைகளுக்கு ஆளானார். இதனால் அறப் போர் வீரராக மாறினார்.

தென்னாப்ரிக்காவின் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சட்ட மறுப்புப் போராட்டம் என்ற ஒரு புது அறப்போரைத் துவக்கினார். இந்தியர்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் அவர்களது உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். அதற்காகவே, வன்முறைகள் இல்லாத ஒரு போராட்டத்தைக் காந்தியடிகள் துவக்கினார்.

எந்தவித ஆதரவும் இல்லாமல், யாருடைய ஒத்துழைப்பையும் எதிர்பாராமல், காந்தி நடத்திய இந்த சத்தியாக்கிரகத்தால்