பக்கம்:அன்னை தெரேசா.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 ஆறுமணிக்கெல்லாம் பொதுத் தெய்வ வழிபாட்டில் கலந்து கொள்கிரு.ர். . அன்னையின் அன்புத் தூதுப் பணி இயக்கத்திற் கென்று அன்னே பக்திப்பரவசத்துடன் பாடிய பிரார்த் தனக் கீதம் இளங்காலைப் பொழுதின் புனிதத்தோடும். அமைதியோடும் கம்பீரமாக அதோ, ஒலிக்கிறது: எதி ரொலிக்கிறது! ' எங்கள் கிறிஸ்து பெருமானே! உங்கள் பேரமைதி வழிந்தோட என்னை ஒரு வாய்க்கால் ஆக்குங்கள்! அப்போது: பகைமை இருக்கும் இடத்தில், நான் அன்பைக் கொணர்வேன்! தவறு தோன்றும்போது, மன்னிக்கும் பண்பைத் தோற்றுவிப்பேன்! முரண்பாடு காணநேர்ந்தால், - அங்கே இணக்கம் காணச் செய்வேன்! பொய்யைச் சாட, மெய்க்குத் துணை ஆவேன்! எங்கே ஐயம் தோன்றுமோ, - அங்கே திடநம்பிக்கை தோன்றச் செய்வேன்! மனக் கசப்பினைப் போக்கிட, பற்ருர்வத்தை மருந்த்ாக ஆக்குவேன்! நிழல்கள் உள்ள இடங்களில் ஒளியூட்டப்பாடு படுவேன்! துயரம் தவழும் இடத்திலே, மகிழ்வை விளையாடச் செய்வேன்!" அன்பே கடவுள்! கடவுள் உங்களையும் என்னையும் நேசிக்கிருர்!