பக்கம்:அன்னை தெரேசா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காணப்படுகிறது! யோசித்துப் பாருங்கள். எவ்வகையிலும் முன்னணியிலே விளங்கிக் கொண்டிருக்கிற ஜப்ப்ான் நாட்டிலோ, அல்லது முன்னேற்றம் அடைந்த ஒரு சில மேற்கத்திய நாடுகளிலோ, எல்லோரும் ஓர் நிறை என்னும் சரி சமானப் போக்குச் சற்றே குறைவாகக் காணப்படலாம்; ஆகவே, அங்கே வறுமை நிலையும், பசிச் சிக்கல் நிலையும் குறைந்திருப்பதாகத் தோன்றலாம்! ஆனல், ஒன்று : மேற்கே நிலவுகிற ஏழைமையின் நில வித்தியாசமானது. ரோம் ஆகட்டும், லண்டன் ஆகட்டும், ஏன், அமெரிக்காதான் ஆகட்டும்! - அங்கெல்லாம் ஆத்மாவின் வறுமையும் வெறுமையும் மிஞ்சிக் கிடக்கும்! .. இரவு நேரங்களில், லண்டனிலுள்ள எந்தப் பூங்காவிற்குப் போனலும் சரி, அங்கே மனிதர்கள், தன்னந்தனியாக, சமூகத்திலிருந்து தூக்கி வீசப்பட்டவர்களாகப் பெஞ்சுகளில் தூங்கிக் கொண்டிருப்பதை எப்போதும் பார்க்கமுடியும். மேலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களிலே போதைப் பைத்தியம் வேறு பேயாய் ஆட்டிப் படைக்கிறது. இங்கே, இந்தியாவிலும் ஏதோ வொரு காரணத்தின் பேரில் பொதுவான மக்கள் "அடிக்கடி நியாயமின்றி கொல்லப்படுகிருர்கள்!” - பொதுவுடைமை வாதிகள் மக்களிடை நிலவும் சரிநிகர் சமானம் இழந்த போக்கைச் சீராக்கி விட்டதாகச் சொல்லிக் கொள்வது பற்றிய கேள்வி இப்போது கேட்கப் பட்டது. - - அன்ன . அது உண்மையல்ல. கம்யூனிஸ்ட் தேசங் க்ளில் பெருமளவில் சமத்துவமின்மை தலைவிரித்தாடுகிறது. ஆனல், அங்குள்ள மக்கள் அதைப்பற்றி வெளியில் எதுவுமே பேச அனுமதிக்கப்படுவதில்லை! அவ்வளவே தான்!-ஆலுைம், பொதுஉடைமைக் கட்சிக்காரர்களிலே லர் மிகவும் அன்போடும் பரிவோடும் மக்களிடம் பழகி வருகிருர்கள்; அவர்களைப் பொறுத்தமட்டில், இதுவரை பிலும் என்க்கு எவ்விதமான சிக்கலும் ஏற்பட்டது கிடையாது. நான் யூகோஸ்லாவியாவில் பிறந்தவன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/30&oldid=736340" இலிருந்து மீள்விக்கப்பட்டது