38. "அப்படியானல், உன் விருப்புப்படி நட! குறுக்கே நிற்க நாங்கள் யார்?" х - தாய்க்கு அளவிலா மகிழ்ச்சி. மகளுக்கும் களிப்பு நிலைகொள்ளவில்லை; பெற்றவர்கள் என்னை எவ்வளவு பாங்குறப் புரிந்து கொண்டுவிட்டனர்!-கன்னி அக்னெ ஸ்"க்கு அன்றிரவு உறக்கம் இல்லை. நான் பாக்கியவதி தான்; ஐயமில்ல; ஆனந்தக் கடல் ஆடிய அக்னெஸ், இலட்சியக் கனவின் அலைகளிலே ஆனந்தமாக மிதக்கத் தலைப்ப்ட்டாள். கருணத் தந்தையே, இவ்வுலக வாழ்விற். குரிய மகிழ்ச்சியை எல்லாம் துறந்து, அன்பிற்குகந்த என் குடும்பத்தைப் பிரிந்து செல்லக்கூடிய பரியக்குவத்தையும், வல்லமையையும் எனக்கும், என் மனத்திற்கும் வழங்குவீர் களாக!' என்று பிரார்த்தித்தாள்; பிரார்த்தித்துக் கொண்டே யிருந்தாள். . . நாட்கள் ஊர்கின்றன; உருளுகின்றன. இப்பொழுது அக்னெஸ் புதிதான மனத்திண்மையைப் பெற்று விட்டாள். இன்று புதிதாகப் பிறந்தேன் நான்!” என்னும் மெய்ப்பாட்டின் உணர்வில், அவள் உள்ளம் தனிப் பட்ட குது.ாகலத்தை அடைந்தது. தன்னைப் பற்றிய ஆசாபாசங்களை ஒழித்தும் அழித்தும் உலகிற்கு ஒளி காட்ட வேண்டுமே யென்ற பொதுநலப் பண்பாட்டின் உணர்வுடன், நாளும் பொழுதும் தோத்திரம் செய்து வந்த தற்குப் பலன் கிடைத்து விட்டது! அக்னெஸ் கன்னி-தன்னுடைய மேன்மை மிக்க தியாக வாழ்வைத் தூய நல்வாழ்வாகத் தொடங்கவும் தயா ராளுள்! ஆமாம்; நல்லபடியாகவே, 1929 ஆம் ஆண்டு பிறந்தது. . கன்னி அக்னெஸுக்கு இவ்வாண்டு நல்லபடியாகவும் அமைந்தது!-தன்னுடைய இந்த மண் வாழ்க்கை தனக்குத் தானே மகிழ்ச்சி அடைவதற்காக அமைந்ததல்ல.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/38
Appearance