பக்கம்:அன்பின் உருவம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதப் பெருங்கடல் 35

ஒருமையாக இயக்கி, சிதறுண்ட பார்வை முதலியவற்றை ஒரேதிக்கில் செலுத்தி வாழ்ந்தவர்கள் நம்முடைய காட்டில் பலர் இருந்தார்கள். அவர்களுக்குள் மணிவாசகப்பெரு மான் ஒருவர். அவர் இறைவனுடைய திருவருளேப் பெறு வதற்காக ஏங்கிகின்ருர் பெற்ருர். அந்தப் பெருமானுடைய திருவருளினலே தாம் பெற்ற இன்பத்தைப் பற்றிப் பெருமிதத்தோடு பேசுகிருர், பல சமயங்களில் தாம் அந்த நிலையினின்றும் சற்றுத் தாழ்ந்ததுபோல அவருக்குத் தோற் றம் உண்டானல், "ஐயோ. நான் இன்னும் உயர்ந்த நிலைக்கு வரவில்லையே' என்று ஏங்குவார். அவருடைய அன்பின் முறுகலான கிலேயே அந்த ஏக்கம் உண்டாவதற்குக் காரணம். வேறு சில இடங்களில் இறைவனுடைய திரு வருளினலே தாம் பெற்ற இன்பத்தால் உண்டான பெரு மிதத்தோடு களிக்கூத்தாடுவார். எம்பெருமானுடைய திரு வருளே கினைந்து நன்றியறிவோடு பாடுவார்.

,★

மாணிக்கவாசகர் மந்திரி பதவியிலே இருந்தவர். ஒரு குடும்பத்தை கிர்வாகம் செய்வதே மிகவும் அருமையாக இருக்கின்ற மனித வாழ்வில் ஒர் அரசனுக்கு வேண்டிய ஆலோசனை சொல்லுகின்ற மந்திரியாக இருந்தால் அவர் எத்தனையோ செய்திகளை கினைக்கவேண்டும்; யோசனை சொல்லவேண்டும்; சூழ்ச்சியிலே வல்லவராக இருக்க வேண்டும். மந்திரிகளுக்கே சூழ்வார் என்ற ஒரு பெயர் உண்டு. எப்பொழுதும் மேல்வரும் காரியத்தைச் சிந்தித்து, முன்னலே நிகழ்ந்தவற்றின் அநுபவங்களேயெல்லாம் சிங் தித்து, இனி எப்படி நடக்கவேண்டும் என்று வரையறை செய்து, அரசனுக்கு அறிவுரை கூற வேண்டியவர்கள் அமைச்சர்கள். நல்ல அமைச்சராக இருந்த மணிவாசகப் பெருமான் தமக்காகச் சிந்தனே செய்வதோடு நில்லாமல் அரசனுக்காகவும் சிந்தனை செய்தார். பாண்டிய நாட்டுக்