பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i 6


அலங்க மலங்க அடித்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும். இவை மூன்றும் பெருங் குற்றங்களாகும், ஒவ்வொன்றும் மாமல் லனை நையாண்டி செய்யத் தவற வில்லை. மேகலையின் மீதிருந்த அவனுடைய வெஞ்சினம் அவளைக் கண்டதும் மறைந்தது. அவளது பருவ எழில் போதை பூட்டியது. அவன் மயக்கமடைந்தான்,


மயங்கினான் !


தன் நிலை பெற்றதும், “சரி, ஐ லவிவிட்டு வரலாம் மேகலை !’ என்றான அவன் அவள் உடன் தொடர்ந்த ள்.


பிரயான ஏற்பாடுகள் நடந்தன, அம்பாள் காப்பித் துரள் கம்பெனி, காமராசர் வாசகசாலை, செட்டியார் பாத்திரக்கடை முதலான இடங்களில் விடை’ பெற்றுக் கொண்டான் மாடல் வன்.


மேகலையும் தனக்குத் தெரிந்தவர்கள் வீடுகளிலும் உரித்தான தோழிகளிடத்திலும் பயணம் சொல்லிக் கொண்டாள். பெற்றவர்களையும் உடன் பிறப்பையும் எப்படிப் பிரிவது என்ற ஆறாத் துயரத்தில் இருந்தாள். மாடியிலிருந்த அவளிடம் ஏதோ சொல்ல வந்த மாமல்லனை அழைத்த குலோத்துங்கன் அவனிடம் ஒரு சங்கிலியைக் கொடுத்தான். உங்கள் மனைவிக்கு என்னுடைய கல்யாணப் பரிசு ’ என்று துலாம்பரமாகப் பேசினான்.


“வாங்கிக்கங்க, அத்தான் ‘ என்ற வேண்டுகோளை மாடியிலிருந்த மேகலை உதிர்த்தாள்.


மாமல்லனின் கைகளில் தங்கச் சங்கிலி ஒளி வீசிக் கொண்டிருந்தது.


கணப்பொழுது ஒன்றோடு நிற்குமா ?


எக்ஸ்பிரஸ் வந்தது.