பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#43


தாய்மை மெருகு ஏறிய அவளுடைய மேனியில் அடங்கிக் கிடக்க ஒப்பாத பட்டுப் புடவை சரிந்து வழிந்து கொண்டேயிருந்தது. மாமல்லனின் கண்கள் இரண்டும் அவளை விழுங்கி விடுவன போலிருந்தன. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நினைத்துக் கொண்ட மேகலைக்குரிய கரு வண்டு ஜோடி திசை திரும்பிச் சுழல எத்தனம் செய்தது.


“காப்பி குடிக்கவில்லையே, மிஸ்டர் மாமல்லன் !’ குலோத்துங்கனுக்குப் பேசத் தெரியும் !


தன் கடமையை நிறைவேற்றி விட்டு, கணக்காக கால் மேல் போட்டு அமர்ந்தபடி சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கத் தொடங்கினான் குலோத்துங்கன்.


வேடிக்கை பார்த்தாள் மேகலை.


எங்கோ இட்ட தீ எங்கோ பற்றி எறியத் தொடங்கிற்று, அவன் துடித்தான். அவன் எனில், குலோத்துங்கன் விலக்கு !


“நீங்கள் குளித்து விடலாமே ? வெந்நீர் போட்டிருக்


கிறேன். இன்றைக்கு அநேகமாக சிந்தாமணி வந்து விடுவார்கள் !’ என்றாள் மேகலை.


மாமல்லன் தேள் கொட்டினாற் போன்று துடித்தான்


புகை அடங்கியது. எங்கே ?- மாமல்லன் வகையில் அல்லவே ?


நெற்றிச் சுருக்கங்கள் விரிந்து விலக மேகலையை குலோத்துங்கன் உன்னிப்பாக கவனித்தான்.


‘நல்லதுங்க !'