விந்தன் 123 அடுத்த கணம் அந்த மங்கல நானும் தேய்ந்து மறைகிறது; ஐயோ!' என்று என்னுள் ஏதோ ஒன்று அலறுகிறது; கண்களைத் திறக்கிறேன்; எங்கே, என் மங்கல நாண் எங்கே? எதிரிலிருந்த நிலைக்கண்ணுடி யில் என் அமங்கலக் கோலம் தெரிகிறது. அதற்கு மேல் மாட்டப்பட்டிருந்த படத்தில் காட்சியளிக்கும் என் கணவர் என்னைப் பார்த்துச் சிரிக்கிருர். அவ்வளவுதான்; என்னை மன்னித்துவிடுங்கள் சுவாமி, என்னை மன்னித்துவிடுங்கள்!” என்று நான் கைகூப்பி கின்று கண்ணிர் வடித்தேன். என்னை நீங்கள் துறந்தாலும் உங்களை நான் துறக்கக்கூடாது; துறக்கவும் முடியாது!’ என்ற உறுதி என் உள்ளத்தை மறுபடியும் உறைவிடமாகக் கொண்டது. ஒருவேளை எனது செயலுக்கு விதிவசமான காரணம் ஏதும் இருக்குமோ?...எங்கோ என் அறிவுக் கும், புலனுக்கும் எட்டாத துரத்தில் இருக்கும் என் அன்புக் கணவர்தான்! என்ைேடு இருந்த காலம் வரை அவர் என்மீது வைத்திருந்த அன்பில் சற்றும் குறை இருந்ததில்லையே?-அவருக்கு ஏதேனும் ஆபத்துஅதாவது, அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்க் திருக்குமோ?-இல்லாவிட்டால் எனக்கு ஏன் இந்த அமங்கலக் கோலம்: இதுவும் விதியின் செயல்தான , என்ன? போடி, புத்தி கெட்டவளே! எதுவாயிருந்தா லென்ன, பவித்திரமான அந்த மங்கல நாணை எடுத்து மறுபடியும் அணிந்துகொள்” என்று என் அந்தராத்மா எனக்குக் கட்டளையிட்டது.
பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/125
Appearance