இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விந்தன்
25
"நீங்கள் மட்டும் நல்லவராக்கும்!” என்றேன், நானும் சிரித்துக்கொண்டே.
"இல்லாவிட்டால் அன்பின் ஆழத்தை அளந்தா பார்க்க முடியும்?"என்றார் அவர்.
இந்தச் சமயத்தில், யாரோ ஒரு புண்ணியவான் "ஐயோ, என் லலிதாவைக் காணோமே?”என்று உரிமையுடன் அலறவே, இருவரும் திடுக்கிட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தோம்.