29
விமானம் இல்லையென்று ஆகாயவிமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராஜா காலத்தில் தபால்கார்டு இல்லை, தந்தி கிடையாது என்றா இன்று தள்ளி விடுகிறார்கள், கிடையாதே!
எனவே அந்தக்காலம் அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்கால பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று பிடிவாதம் செய்வதும் பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.
எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தேவையானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப் பின்பற்றவேண்டுமே தவிர அந்தக் காலத்துப் பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும், பொருத்தமில்லாமலும் பின்பற்றக்கூடாது.
உலகத்தில் மற்ற நாடுகள் எவ்வளவோ முன்னேற்றமடைந்தன, இந்த நாடு மட்டுமேதான் எல்லாத் துறைகளிலும் பழம் பெருமை பேசிக்கொண்டும், அந்தக்காலம் என்று கூறிக்கொண்டும் முன்னேறாமல் பின்தங்கிக் கிடக்கிறது. நாமும் மற்ற நாடுகளைப்போலவே எல்லாத் துறைகளிலும் முன்னேறியாக வேண்டும். நாம் அறிவுத் துறையில் முன்னேறியாக வேண்டும்.
நாம் அறிவுத்துறையில் முன்னேற்றமடைந்தால்தான் நம்மிடமுள்ள பழமைக் கருத்துக்கள் அகலும், பாசி பிடித்துப்போன கண்முடி பழக்கங்களும் தொலையும். மடமூட நம்பிக்கைகள் முறியடிக்கப்படும் என்பதை நாம் உணர வேண்டும்.