பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31 அண்மையில் எங்கோ ஒரு இடத்தில் பாரதப் பிர சங்கம் நடந்ததாம். அதன் கடைசி நாளன்று பீமன் வேஷம் போடுபவன் துரியோதனைக் கொல்வதற் காகப் படுகளம் நடந்தது. அன்று 6 அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் மண்ணினால். செய்யப்பட்டி ருந்தது. இதனை பீம்வேடதாரி வெட்டி வீழ்த்தினான். இதனை சுதேசமித்திரன் பத்திரிகை படம்பிடித்து பெரி தாகப் போட்டுக் காட்டியிருக்கிறது. இப்படிப்பட்ட கேவலமான பழக்கங்களையும், அர்த்த மற்ற திருவிழாக்களையும் பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால்தான் நாம் உண்மையிலேயே முன்னேற முடியும். ஆகவேதான் சீர்திருத்தத் திரு பணங்கள் நடப்பதின் மூலம் அறிவுப் பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிறதென்று குறிப் பிடுகிறோம். சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத் திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக்கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்துகொள்ளும் இந்த மணமக்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். மனதார வாழ்த்துகிறேன். இந்த திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது பாடக்கூடதா என்றும் சிலர் கேட்ட தாக நண்பர்கள் குறிப்பிட்டார்கன். இப்படிப் பட்ட திருமணங்களிலே அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத் தான் மாட்டோம், பாடவும் கூடாது என்பதை நண்பா களுக்குத் தெரிவிததுவிடுகிறேன்.