பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

படாத 33 பாடப்படாத எந்தப்பாடலையும் பாடுவதில்லை, பாடவும் விடுவதில்லை. நம்மைப் பற்றியும், நமது வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படும், அக்கறை காட்டும் நண்பர்களைத்தாள் நாம் அழைக்கிறோம், அப்படிப்பட்டவர்களால் தானே நாம் முன்னேற வழிவகைகளை காட்ட முடியும்,கூற முடியும்! ஆகவே தேவாரம் பாடவில்லை, திருவாசகம் படிக்க வில்லை, அய்யாரைக் கூப்பிட்டு மந்தியம் ஓதவில்லை என்பதற்காக எவரும் கவலைப்படத் தேவையில்லை என் பதை மறுமுறையும் வலியுறுத்திக் கூறுகிறேன். கடைசியாக சில பெரியவர்கள் இங்கே அம்மி மிதித்து அருந்ததி காட்டவில்லை. அக்கினி வளர்க்கவில்லை, ஆண்டவனைப் போற்றவில்லை என்று குறைபடுவதற்கும் அர்த்தமில்லை யென்று சொல்லிவிடுகிறேன். திருமணத்தில் அக்கினி வளர்ப்பது எதற்காக? திருமணத்திற்கு அக்கினிதேவன் சாட்சியாக இருக்கிறான் என்பதற்குத்தானே? அந்த அக்கினி பகவான் யோக் கியதை என்ன ? அருந்ததி என்று ஒரு சினிமாக் கூட வந்ததே. அதைப்பார்த்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும், நான் கூறப்போவது. ஒரு காலத்தில் சப்தரிஷிகள் ஒரு யாகம் செய்தன ராம் அந்த யாகத்திற்குச் சென்று அவிர்ப்பாகம் வாங்கிச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழுரீஷி பத்தினிகள் மீதும் காமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டுத் தன் மனை வியிடமே கூறினானாம் இந்தக் காலத்தில் எப்படிப்ட்ட கேடுகெட்ட மனிதனுங்கூட தான் கட்டிய மனைவியிடம், தான் பிற பெண்ணின் மீது ஆசை வைத்திருப்பதாகக் அ-3