பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

________________

83 படைத்தலைவரிடம் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது சிறிய குறிப்பொன்று அவன் கையில் சிக்கியது. அதை அவன் உடனே பிரெஞ்சுபடைத் தலைமை இடத்திற்கு அனுப்பினான், அந்தக் குறிப்பில் பிரெஞ்சு நாட்டுக்கு உயிர்போன்ற படையமைப்பு இரசு சியங்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த இரகசியங்கள் படைத்தலைமைக் குழவினருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும. யார் அந்தத் துரோகி? படைத்தலைவர்கள் ஒன்று கூடி ஆராய்ந்தனர். கடைசியாக ஆல்பிரட் டிரைபஸ் என்ப வன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. உண்மையில் அந்தத் துரோகத்தைச் செய்தவன் எஸ்டர் ஹேஸி என்பவன். படைத் தலைமைக் குழுவின் செல்வாக்குப் பெற்றிருந்த எஸ்டர் ஹேஸியின் நண்பர்கள், அவசரமாக டிரைபஸ்மீது வழக்குத் தொடுத்தனர். 1985-ம் ஆண்டு டிரைபஸ் இராணுவ மன்றத்தால் குற்றஞ் சுமத்தப்பட்டு, அந்தமான் போன்ற டெவில்ஷ் தீவுக்கு அனுப்பப்பட்டான். தண்டிக்கப்பட்ட உடனேயே அவன் வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட் டான். பெரிய மைதானத்தில் அவனுடைய படைவாளும் இராணுவச் சின்னங்களும் பிடுங்கப்பட்டன. கூடியிருந்த மக்களும் ஒழிக டிரைபஸ்' என முழங்கினர். கடல் முழக் கத்தில் பறவை கூவுவதுபோல், டிரைபஸ் "நான் குற்ற மற்றவன்! பிரஞ்சு வாழ்க!" எனக் கதறினான். டிரைபஸ் அங்கு ஒரு பக்கத்திலிருந்த பத்திரிகைக்காரனைப் பார்த்து "நீங்களாவது எனது தூய்மையை உலகுக்குக் காட்டுங்கள் எனக் கூறினான். பத்திரிகைக்காரர்களுக்கு உண்மையை எழுதச் சொல்ல இவன் யார்? அவர்கள் திரும்பினார்கள். "துரோகி டிரைபசின் முடிவு"என்று கொட்டை எழுத்துக் களைத் தீட்ட.