பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

________________

87 ஜோலா உரத்த குரலில் கூவினார். பத்திரிகைக்கூட வாயிலில் மக்கள் கூட்டம் தேங்கியிருந்தது. கண்ணாடிக் கதவுகளின் வழியாக ஆச்சரியமுற்ற கலங்கிய முகங்கள் துடிதுடிப்புடன் காத்துக் கொண்டிருந்தன. "புகழ்பெற்ற பிரெஞ்சு தாயகத்தின் தனிப்பெருந் தலைவரே! மூன்று ஆண்டுகளாக வழக்கை நடத்திய டார்ட் என்பவர் மீது நான் குற்றஞ் சாட்டுகிறேன். கிடைத்த உண்மைக் குறிப்புகளை மறைத்ததற்காக யுத்தமந்திரியின் மீது நான் குற்றஞ் சாட்டுகிறேன்! அதே பழிச் செயலைச் செய்த இராணுவக் குழுவினரையும், உதவி படைத் தலைவரையும் நான் குற்றஞ்சாட்டுகிறேன் ! கைதியினிடத் தில் கொடுமை காட்டிய பாரிஸ் சிறைச்சாலைத் தலைவர்மீது நான் குற்றஞ் சாட்டுகிறேன். வழக்கில் பொய்ச் சாட்சி களும் பொய்க் கையெழுத்தும் தயார் செய்தவர்கள் மீதும் குற்றம் சாட்டுகிறேன்! பொது மக்களின் மனதை மாற்றும் வகையில் பொய்ப் பிரசாரம் செய்த யுத்த இலாக்கா முழுவதையும் நான் குற்றம் சாட்டுகிறேன்! வழக்குக்கு ஆதாரமான சாட்சி யங்களை தண்டிக்கப்படுபவனால் பரிசீலனையும் சமாதானமும் கூறமுடியாத வகையில் அவசரத்துடன் அநீதி வழங்கிய முதல இராணுவ மன்றத்தை நான் குற்றம் சாட்டுகிறேன்! உண்மையான குற்றவாளியை குற்றமற்றவனென" பெருந்தவறு செய்த இரண்டாவது இராணுவ விசாரணை மன்றத்தை நான் குற்றஞ் சாட்டுகிறேன்! ஒரு அனாதையின் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி ஆயுட்கால தண்டனை யைக் கொடுத்த அனைவரையும் - அந்தக் குற்றஞ் சாட்டிய அனைவர் மீதும் நான் குற்றஞ் சாட்டுகிறேன்! இத் தகைய குற்றச் சாட்டுக்களை தெரிவிப்பதன் மூலம் நான் சட்டத்தை அவமதிப்பவனாக அவதிக்குள்ளாக்கப்படுவேன்