பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

71


வேண்டா. தன்னலத்தை அழிப்பதன் மூலம் தீச்செயல்களையும் அழித்துவிடக்கூடிய புதுவகையான வாழ்க்கை முறை: வாழும் வழி; வாழ்க்கை நெறி; வாழ்வியல் சட்டம்.

தன்னலம் என்னும் தடைகல் பெயர்ப்பதால்
இன்னலம் எய்தும் உலகு.

அன்பு நெறி

ழுச்சியும் ஊக்கமும் குறைந்தவர்களின் வலுக் குறைவதைக் தாங்கிக் கொள்ளத் தேவையான வலுவினைப் பெற்றிட வேண்டும். நம்மை நாமே தேற்றிட மகிழ்வுறச் செய்திடற்கன்று.

ஆன்றவிந்தடங்கிய செயிர்தீர் செம்மல், தமக்கு மகிழ்ச்சியைத் தேடிக் கொள்ளவில்லை. மற்றவர்க்கு மகிழ்ச்சியைத் தேடித் தந்தார். அதற்காகத் தம்மையே தந்தார்! ஆகவே நாம் நம்முடைய செல்வத்தைக் காசு பணத்தைக் கொடுப்பவராக மட்டுமன்றி நம்மையே கூட மற்றவர் வாழ - மகிழக் கொடுப்பதற்கான வலிவும் அன்பும் பெற்றவர் ஆவோம். 'தான்' என்பது 'தனக்கு' என்பதை மாற்றி தான் என்பது 'மற்றவர்' என்றும் தனது' 'தனக்கு' என்பதை 'மற்றவருடையது' மற்றவர்க்கு என்னும்படி மற்றவர் நலம் நாடும் நன்னலத்தைப் பேணி வளர்ப்போம். இன்னும் அந்தத் தன்னலத்தை மன்னுயிர் 'நலம்’ என்னும் 'நன்னல'மாய்த் தழைக்கச் செய்வோம்.

நமக்குப் பாடத் தகுந்த குரல் அமைப்புப் பெற்றிருந்தால் அதனை, மேலும் வளமாகப் பாடிடும் தகுதியானதாக, இனிமை யானதாகச் செய்யப், பாடிப்பாடிப் பயிற்சி செய்யலாம். செய்த பின், இறைவனை ஏற்றிப் போற்றிப் பாடும் பாடல்களைப் பாடி மற்றவர்களை மகிழ்விக்கலாம்! அந்த மகிழ்ச்சியில் இறைமையின் மகிழ்ச்சியைக் காணலாம். இனியகுரல் வளம்தான் என்பதில்லை; கவிதை இயற்றுவதோ, ஓவியம் வரைவதோ, அறிவியல், கருவி படைப்பதோ எனும் எத்தகைய பேறு அருளப் புெற்றிருந்தாலும் அதனைப் பொன்னே போல் காத்துப் பேணிப் பெருக்கி மற்றவர்க்கும் பயன்படுமாறு மகிழுமாறு செய்யும் அரிய பரிசளிப்பாகச் செய்திட - அளிக்க நம்மை நாம் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.