பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

அனுபவித்த ஒருவன் அவன் வயத்தனாய் நின்று செயலில் தலைமைத் தன்மை அடைவானாயின், அம் மன்னன் அவனால் உள்ள பயனைக் கொண்டாற்போல் பல பயனையும் நான் இங்கு அடையப் பெறுவேன்!” என்றான்

‘நீ சொன்னவண்ணமே ஆகுக’ என்றாள் தலைவி சிறிது வெறுத்தவள் போல்!

அதைக் கேட்ட தலைவன், “நீ இங்ஙனம் வெறுத்துக் கூறுவதை விடு முத்துப் போன்ற பற்களை உடையவளே! நீ முன்பு அடைந்த பசலையெல்லாம் இனி எக்காலத்திலும் உண்டாகாதபடி கழித்து விடுவதற்கு வேங்கைப் பூவின் அழகைக் கொண்ட கணங்குடைய உடலால் பொய்யாக வேனும் ஒருமுறை முயங்கிச் செல்வாயாக!” என்று சொன்னான்

487. மணமின்றித் தலைவியைக் கூடல் அரிது

திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது; ஒரு நிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல்,
அம் துகில் போர்வை அணி பெறத் தைஇ, நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக-
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை,
தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே
பாரா, குறழா, பணியா, 'பொழுது அன்றி,
யார் இவண் நின்றீர்? எனக் கூறி, பையென,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
'தையால் தம்பலம் தின்றியோ?' என்று, தன்
பக்கு அழித்து, 'கொண்டீ' எனத் தரலும் - யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்ப-கடிது அகன்று கைமாறி,
'கைப்படுக்கப்பட்டாய், சிறுமி நீ' 'மற்று யான்
ஏனைப் பிசாசு அருள்; என்னை நலிதரின்,
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்’
எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப -