பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

ததால் வறுமை உண்டாகக் கலப்பை முதலிய கருவிகள் செயல் அற்றிடக் கோடை உண்டான பசுமையில்லாத காலத்தில், பெரிய நீர்நிலைகள், குன்றங்களைப் பார்த்தால் போன்ற பெரிய கரையையுடையன; பறவைகள் வந்து தங்காதவை; நீர் இல்லாதவை; வெப்பம் மிக்கவை. இத் தகைய நீர்நிலைகள் யாவும் நிறையுமாறு பெரிய மழை பெய்த, இன்பம் மிக்க விடியற்காலையில், அம் மழை கண்ட பலரும் மகிழ்ந்த மகிழ்ச்சியை எல்லாம் ஒரு சேர எனக்குள் செய்து வைத்தது போன்ற மகிழ்ச்சியை அடைந்தேன்" என்று தலைமகன் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொன்னான்


387. தலைவியின் துன்பம் நான் அறியேன்

'அன்னாய்! வாழி! வேண்டு அன்னை, நின் மகள்
பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம்
 யானும் தெற்றென உணரேன், மேல் நாள்,
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி
'புலி புலி' என்னும் பூசல் தோன்ற -
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
'யாதோ, மற்று அம்மா திறம் படர்?' என
வினவி நிற்றந்தோனே, அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி
நாணி நின்றனெமாக, பேணி,
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?' என்றனன், பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்த
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்