பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

105


என்னை நினை யாது கழியின், பலநாள் யான் வாழ மாட்டேன். என்னிடத்தில் ஏற்பட்ட நோயைப் பிறிதொன்றால் ஏற்பட்டது என்று கூறுவர். உண்மை ஒரு புறமிருக்க, பழி பிறிதொன்றால் ஆயது என்பது பண்பான செயலில்லையே” என்று தலைவன் மணம் கொள்ளாது நீட்டித்தலால் தோழி ஆற்றுவித்தும் ஆற்றாத் தலைவி வருந்திக் கூறினாள்.

194. நோயின் காரணம் என்ன? உரையாய் - வாழி, தோழி! - இருங் கழி இரைஆர் குருகின் நிரைப் பறைத் தொழுதி வாங்கு மடற் குடம்பைத், துங்கு இருள் துவன்றும் பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பைக் கானல் ஆயமொடு காலைக் குற்ற கள் கமழ் அலர தண் நறுங் காவி அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, வரி புனை சிற்றில் பரி சிறந்து ஒடிப், புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல் சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் சிறு விளையாடலும் அழுங்கி, நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே.

- - காஞ்சிப் புலவனார் நற் 123 "தோழி, வாழி. பெரிய கழியில் இரை தின்னும் குருகின் நிரையாகிய பறவைக்கூட்டம் வளைந்த பனை மடலிற் கட்டிய கூடுகளில் நிறைந்த இருட்பொழுதில் நெருங்கியிருக்கும். அப் பனை மரங்கள் உயர்ந்த வெள்ளையான மணற் கொல்லைக் கானலில், தோழிமார் கூட்டத்தோடு காலையில் பறித்த தேன் மணக்கும் மலரையுடைய தண்ணிய நறிய குவளையை அழகுற மாறி ஒன்றோடொன்று வைத்துப் பின்னித் தைத்த தழை உடையை அழகு பெற உடுத்திக் கொண்டு, கோல மிட்ட சிற்றிலில் விரைவு சிறக்க ஓடி விளையாடப், புலவு நாற்றமுடைய அலை மோதும் வளைந்த அடியையுடைய கண்டல் மரமுள்ள கடற்கரையில் அழகுற்ற குளிர்ந்த வளை யில் வாழும் நண்டைக் கண்டு மகிழும் சிறிய விளையாட்டும் தவிரும்படி உனக்குற்ற பெரிய துயரமாகிய நோயை எனக்கு