பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ? அன்பொடு புணர்ந்த ஐந்தினை - தெய்தல்

என ஆங்கு - மாலையும் அலரும் நோனாது, லம்வயின் நெஞ்சமும் எஞ்சும்மன் தில்ல்-எஞ்சி, உள்ளது அமைந்தோர், உள்ளும், உள் இல் உள்ளம், உள்உள் உவந்தே

- நல்லந்துவனார் கலி ft பகைவரோடு போர்த் தொழில் செய்ய வல்ல ஒழுக்கத் தால் வெல்லும் புகழை உடைய மன்னன் நல்ல அறநூல் நெறியால் பல உயிர்களையும் , காத்துத் தீவினையால் உண்டாகும் நடுக்கம் உள்ளத்தில் இல்லையாகும்படி தான்் செய்த பழ வினையின் பயனை துகரத் துறக்கத்தை விரும்பிப் போவான். அது போல் கதிர்களை உடைய ஞாயிறு இருளை அழித்து உலகத்துக்குப் பகற்பொழுதை உண்டாக்கிப் பின் மறையும் மலையில் சேரும் பின் கலக்கம் உடைய உலகத்தில் அம் மன்னனுக்குப் பகை மன்னன் வந்து அவ் உலகைக் காப்பான் போன்று, தனக்கு மாறான இருளை மதிபோக்க, அந்தக் குடையால் நிழல் செய்து ஆண்ட மன்னனுக்கும் ஆனவரும் மன்னனுக்கும் நடுநின்ற வருத்தத்தைத் தரும் இடைக் காலம் போன்று வந்துவிட்ட மாலையே! நீ மருண்ட மாலையாய் இருந்தாய்

அதற்குக் காரணம் என்னவென்றால், நமக்கு வலிமை இல்லாது நீங்குமாறு நம்மைத் துறந்தவரை எண்ணுகையில், நீர் நிலைகளில் மலர்ந்த மலர்போல் உன்னைக் கண்டு மனம் குவிந்த என் அழகை உடைய நலத்தை இகழும் நீ, அழகிய இறகையுடைய வண்டுகள் ஆரவாரம் செய்யும்படி, கட்டு அவிழ்ந்த கோட்டுப் பூப் போல் மனம் நெகிழ்ந்த காதலருடன் கூடியிருக்கும் மகளிரின் அழகைப் போக்க மாட்டாய் என்று அதனது மருட்சியைக் கூறினாள்

ஆயரின் தனித்த குழலோசை தை' என்ற ஓசை தோன்ற ஒலிக்க, அதைக் கேட்டு வருத்திய நெஞ்சம் உடைய எம் பக்கத்தில் நின்று எயிரைக் கொள்ளாமல் வியப்பாகப் பாராட்டுகிறாய் இத்தகைய தீ, தம் கணவர் பிரித்த சமயத்துச் செவிவழி என்ற பண்ணினைக் கொண்ட யாழின் தரம் போசை போன்று வருந்திக் கூறும் சொல்லைப் பெற்ற மகளிர்,