பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அடைந்தன போல் இருந்தன. ஆகவே, தோழி, இரவெல்லாம் நம் வருத்தத்தைப் பார்த்துத் தாம் வருத்தம் அடைந்தன எனக் கூறினாள்

அதைக் கேட்டாள் தலைவி, "கரையை இடித்துத் தனக்கு ஆக்கிக் கொள்ளும் கழியிடத்தில் பார்த்தவர் கண்ணை வாங்கிக் கொள்ளும் அழகையுடைய பறவைக் கூட்டம் அலை எறிதலால் இறந்து போன புலால் நாற்றத்தையுடைய மீனை இரையாய் உண்பதே. அல்லாது, தாம் ஒன்றின் உயிரைப் போக்கி உண்ணாத அருள் துறைவனை, நாம் பாடும் ஊசற் பாட்டை, நீ இயற்பழித்ததை அழித்து, இயற்பட ஒன்றைப் பாடுவாயாக’ என்று சொன்னாள் தலைவி 娥

அதைக் கேட்ட தோழி தலைவி சொன்னவண்ணம் பாடவில்லை அதனால் தலைவி மணம் கமழும் கூந்தல் உடையவரிடம் உண்டாகிய ஊடலை, அது உண்டான போதே விரைந்து தீர்ப்பவன் , துறையில், திரண்ட இடு மணலில் குவளை எனக் கூறப்படுபவை வருந்த, அவற்றைத் தம்மில் பிணங்கி வரும் கடுமை கொண்ட பெரிய அலைகள் வந்து அம் மணலைக் கரைத்து அருள் செய்யும் தோழி, இர் வெல்லாம் அருள் செய்தனவாய் இருக்கும் என இயற் பட மொழிந்தாள் -

என்று அங்ங்னம் தலைவனின் இயல்பைப் பழித்தும் இயற்பட மொழிந்தும் நானும் நீயும் பாடினோம் பாடச், சேர்ப்பன், மறைவாய் நின்று பாட்டைக் கேட்டான் நீண்ட வெண்மையைப் பெற்ற நீர்க்கிடக்கை விளங்கும் தன்மை யுடைய சேர்ப்பனை நான் ஊசலை ஆட்டு என்றேன் என்றும் உணர்ந்து, பின் நான் ஊசலை ஆட்டினேன் என நீ மிகவும் மருளும்படி, அவன், தேன் இனம் ஒலிக்கும் புன்னை மரத்தைப் பொருந்தி நின்று, பின்பு வந்து அந்த ஊசலை ஆட்டினான் ஆதலால் நம் வருத்தத்தை அறிந்து வரைந்து கொள்வான் எனத் தலைவியைத் தோழி ஆற்றுவித்தாள்

323. அலர் ஏற்படத் தலைவியைப் பிரிவதா?

உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல், விரவுப் பல் உருவின வீழ் பெடை துணையாக,