பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

287


விரும்பாமல் நான் விரும்பப்பட்ட ஒருவன். அவன் தன்னை விரும்பும் என்னுடனே உறங்காமல் தனியே உறங்குவானோ உறங்கானோ?” என்று சொன்னாள்.

அப்போது தோன்றிய திங்களை நோக்கி “ஒளியை உமிழும் திங்களே, தோள் மெலிந்த காலத்தில் செருகலாம் என்று ஆராய்ந்த தொடி உட்படச் சுழலும்படி அளித்தலை என்னிடம் மாறி, பின்பு எனக்கு அருளாமல் கைவிட்ட காதலன் செய்த மனக்கலக்கம் அடைகின்ற காம நோய்க்கு நின்னைத் தவிர மற்றவர் எல்லாரும் அதற்கு ஒரு மருந்தைத் தெளிந்து சொல்லமாட்டார்கள். ஆதலால் ஊரவர்க்கு எல்லாம் பெரிய இகழ்ச்சி உண்டாகும்படி என் அரிய உயிர் போகின்றது இதை நோக்கித் திங்களான புத்தேளே, நீ அவனிடம் போய் என் குறையை முடிப்பாயாக!” எனச் சொன்னாள்.

அங்ங்னம் சொன்னபோது திங்கள் போகாது நிற்றலால், அதைக் கைவிட்டாள்; “இன்னும் நம் வருத்தம் உணர்ந்து வினவிய ஊரில் உள்ளவரே நமது வருத்தத்தைத் தீர்ப்பதற்கு உரியவர்,” என்று அவள் எண்ணினாள் “ஊரவரே, நீவிர் என்னை இகழ்ந்திருப்பினும் என் கேள்வன் என்னைச் சிறிதும் இகழ்ந்திருக்கமாட்டான். அதற்குக் காரணம் என்னவெனில் மெய்யைப் புணர்ந்து யான் பரிகாரம் அற்ற நெறியிலே நின்று நெஞ்சால் நினைப்பிடத்துத் தோன்றுதலைவிடக் கண்ணிலே தோன்றுவான். என் நெஞ்சம் அவ்வளவு அருள் செய்வதற்குப் பரிகாரப்படுகின்றதில்லை இதை உம் தொழிலாய்க் கொண்டு என் காமநோயை நீக்குதற்கு இது நல்ல காலம்” எனச் சொன்னாள்

அவ்வாறு சொல்லி, "இருளையுடைய முகிலே! நிறைந்த வளையல் கழலச் செய்தவன் உண்டாக்கிய வருத்தத்தால் எனக்குச் சந்து தோறும் சந்து தோறும் (உறுப்பின் பொருந்து வாய் தோறும்)

காமத்தீ உண்டாயிற்று இதன் வெப்பம் ஆறும்படி கடலில் முகந்து என்மீது இடைவிடாது பெய்யும் நீர்த் துளியோடே நிற்றலைச் செய்ய வேண்டும்” என்று சொன்னாள்

என அவ்வாறு கூறிக் காம நோயையுடைய நெஞ்சில் அடித்துக் கொண்டு வருந்தி அழுதாள். "நீங்கள் யாவரும்