பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


"பெரிய கடற்கரையில் உள்ள சிறு வெண் காக்கை நீந்தும் அளவு பெருகிய நீரையுடைய பெரிய கடற்கழியில் இரை யான சிறிய மீன்களை நாடி உண்டு மலர்கள் மணம் கமழும் சோலையில் தங்கும் துறைவனின் சொற்களோ தமக்குரிய இயல்பினின்று வேறுபட்டவையாக உள்ளன" என்று தலைவி தன் தோழியைப் பார்த்துச் சொன்னாள்.

61. நெகிழ்ந்தன வளைகள்! பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை இருங் கழித் துவலை ஒலியின் துஞ்சும் துறைவன் துறந்தெனத் துறந்து என் இறை ஏர் முன் கை நீங்கிய, வளையே. - ஐங் 163 “பெரிய கடற்கரையில் உள்ள சிறு வெண் காக்கை கரியி நீர்க்கழியிலே எழும் துவலையின் ஒலி கேட்டுக் கண்ணுறங் கும் துறையை உடைய தலைவன், என்னைப் பிரிந்தான்ாக. என் திரட்சி பொருந்திய அழகான முன் கையில் அணிந்த வளைகள் என்னைத் துறந்து நீங்கின” என்று தலைவி தோழிக்குச் சொன்னாள்.

62. துறைவன் தகுதி அலராயிற்று! பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை இருங் கழி மருங்கின் அயிரை ஆரும் தண்ணம் துறைவன் தகுதி நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே! - ஐங் 164 “பெரிய கடற்கரையில் உள்ள சிறு வெண்காக்கை பெரிய நீர்க் கழியில் இருந்து அயிரை மீன்களை உண்ணும் தண்ணிய துறைவனின் தகுதி, நம்மிடம் அமைந்தொழியாது பரத்தை யரிடமும் சென்று அலர் தருவதாயிற்று” என்று தலைவி தோழிக்குக் கூறினாள்

63. வளையைக் கவர்ந்து கொண்டது பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை அறு கழிச் சிறு மீன் ஆர மாந்தும் துறைவன் சொல்லிய சொல் என் இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே! - ஜங் 165