பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


"தோழி பறவைகளும் விலங்குகளும் தனிமைத் துயருடன் இருக்க, 'நள்’ என்றும் ஒசைப்பட வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில் பலரும் புகுவதற்குரிய வீட்டுக்கடை வாயிலை அடைக்க எண்ணி வினவுவார் ‘உள்ளே வருவீர் இருக்கின்றீரோ என்று கேட்கவும் நம் தலைவர் வாராரா யினர்” என்று தலைவி கூறினாள்

14. மாலை மட்டுமா துன்புறுத்தும்? பைங் காற் கொக்கின் புன் புறத்தன்ன குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே வந்தன்று, வாழியோ, மாலை ஒரு தான்் அன்றே; கங்குலும் உடைத்தே!

- ஒரம்போகியார் குறு 122 “பசிய கால்களை உடைய கொக்கினது புல்லிய முது கினைப் போன்ற ஆழமான நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் குவிந்தன; இப்பொழுது மாலைக் காலமும் வந்தது அக் காலம் வாழ்வதாக இங்ங்னம் வந்தது மாலை மட்டுமன்று அதன் பின்வரும் யாமத்தையும் உடையது; இனி யான் என் செய்வேன்' என்று தலைவனின் பிரிவை நினைத்து தலைவி வருந்தினாள்.

15. இன்னும் வரவில்ைையே! இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல், நிலவுக் குவித்தன்ன வெண்மணல் ஒரு சிறை, கருங்கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப, இன்னும் வாரார் வரூஉம், பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே.

- ஐயூர் முடவன் குறு 123 "தோழியே! நிலவைத் தொகுத்தாற் போன்ற வெள்ளிய மணற்பரப்பின் ஒரு பக்கத்தில் இருள் செறிந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியும் நிழலும் உடைய கரிய கிளைகளைக் கொண்ட புன்னை மரங்களடர்ந்த பூஞ்சோலையானது தனிமைப்பட்டு இருப்ப, தலைவர் இன்னும் வந்தாரிலர். பலவகை மீன்களை வேட்டையாடுதலையுடைய தமையன்