பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 225

வழியில், உயர்ந்த களிற்றைக் கொன்று மக்கள் இயங்காத நெறியில் புலி திரியும் காட்டைக் கடந்து சென்றார்

“என் மாமை நிறம் தலைவர் இல்லாததால் அழகிய நுண்ணிய பசலை பரவுவதால் பீர்க்கின் அழகிய மலரை ஒப்பதாகும் ஊரில் எழும், பழியானது "அன்னி' என்பவன் 'குறுக்கை' என்ற ஊரின் போர்க்களத்தில் திதியன் என்ப வனின் பழமையுடைய நிலையையுடைய புன்னை மரத்தின் பெரிய அடியை வெட்டித் துண்டித்த காலத்தில் கூத்தர்கள் அவனது வெற்றிப் புகழைப் பாடிய பாணரின் இனிய இசையால் உண்டான ஆரவாரத்தை விடப் பெரிதாகிறது

“பொன்னால் ஆன மாலையையும் கடலில் உண்டான போரை வென்ற வெற்றியையும் நல்ல வேலையும் உடைய வான வரம்பன் என்ற மன்னனின் கொலைத் தொழிலை யுடைய போர் முனையில், அவன் கலக்கம் அடைந்து ஒட, அம் மன்னனின் படையால் உடைக்கப்பட்ட ஒர் அரணைப் போன்று அச்சம் கொண்ட துயரத்தால் உறங்காதவன் ஆனேன் இத்தகைய நான் திருமாவளவனின் மகள் ஆதி மந்தியைப் போல் காதலனைக் கடல் கொண்டு போனதால் அவரைக் காணாத துன்பத்துடன் துன்பம் மிகப் பெற்றுத் தேடித் திரிவேனோ? இனி இறப்பது திண்ணம்” என்று தோழி பொறுத்திருக்கக் கூறியபோது தலைவி இவ்வாறு பிரிவினால் வருந்தி எதிருரை உரைத்தாள்

320. என்னுடன் நெஞ்சே வருக! அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து எழு இனி - வாழிய நெஞ்சே - ஒலி தலை, அலங்கு கழை நாலத் தாக்கி, விலங்கு எழுந்து, கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து, அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும் வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு, அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின் ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,