பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

கெடுவதாக என்று என்னையே நான் நொந்து கொள்ள லானேன் வளைவான தொடைகளையுடைய தன் இளங் கன்றுடன் ஓரிடத்தே கட்டப்பெற்ற விரைந்து விரைந்து கன்றைப் பார்க்கும் பசுவைப் போன்று, அவளுடைய முதுகை அடிக்கடி பரிந்து பார்த்து அணுகிச் சென்று குவிந்து திரண்ட அவளுடைய அழகிய நெற்றியைத் தடவி அன்புடன் மெத்தென்று அவளைத் தழுவினேன். அவ்வளவில் என் மகள் தனது நல்ல மார்பகத்து முலைகள் வியர்ப்ப முன்னாள் போலன்றிப் பல முறையும் ஆர்வத்துடன் தழுவிக் கொண்டாள் அது இப்போது கழிந்தது

ஐயோ! அவளது உள்ளத்தைக் கவர்ந்த வெற்றி மிக்க நெடுந்தகைமையுடைய காளை, பலபடியாகப் பாராட்டி மனம் மகிழ்வித்து உலர்ந்த அரிய நிழலில் இருந்து இளைப் பாறி மழை பொய்த்ததால் உணவு பெறாமல் வருந்திய இளைய மானினது இளைப்புற்ற கூட்டமானது நீர் வற்றிய மரல் புல்லைக் கடித்துப் பார்ப்பதற்கான வலிய பாலையில் தலைவன் தன்னுடன் அழைத்துச் சென்றான். அதை நேற்றே அறிந்திருப்பின், அவளுடைய தந்தையின் உணவுமிக்குள்ள காவல் பொருந்திய பெரிய மனையின் செல்லும் இடந் தோறும் இடந்தோறும் உடலின் நிழலைப் போல் சென்று, அவள் மலர் மாலை அணிந்த தன் தோழியருடன் விளை யாடும் விளையாட்டை மேற்கொண்டு பூத்தொழில் அமைந்த பரலையுடைய தன் சிலம்புகள் ஒலிக்குமாறு அவள் விளை யாடும் இடந்தோறும் அகலாமல் நான் இருப்பேன், அதுவும் கழிந்ததே இனி என்ன செய்வேன்?” என் உடன் போக்குற்ற தலைவி நினைந்து மனையிருந்து வருந்தி உரைத்தாள்

322. பொருள் பிரிவைக் கைவிடுக

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற, நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி எருவைச் சேவல் கரிபு சிறை தீய,