பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 * அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி, அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக் குன்று சேர் கவ்லை, இசைக்கும் அத்தம், நனி நீடு உழந்தனை மன்னே! அதனால் உவ இனி - வாழிய, நெஞ்சே! - மை அற வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச் சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டித் தாழ் இருங் கூந்தல் நம் காதலி நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.

- மதுரைப் பேராலவாயர் அக 87 “என் நெஞ்சே, வாழ்க இனிய தயிரைக் கடைந்த திரட்சி யான காலையுடைய மத்து, கன்றானது தன் வாயால் சுவைத்திடும்படி முற்றத்தில் தொங்கும் மர நிழலான பந்தலை யும் புல்லால் வேயப்பட்ட கூரையையும் உடைய வறிய சிறிய ஊர் அந்த ஊரில் இரவில் தங்கிச் சூட்டையுடைய நீண்ட மரத்தில் உள்ள சேவலின் முதல் குரல் தோன்றும் விடியற்காலத்தில் எழுந்து சென்று, பழைமை உடைய வன்கண்மை உடைய மறவரின் கற்கள் பொருந்திய காட்டரண் களில் உண்டான தண்ணுமைப் பறையின் அகன்ற கண்ணில் எழும் ஒலி, அரிய சுரவழியில் செல்பவர்க்கு அச்சத்தை உண்டாக்கும் குன்றைச் சார்ந்த கவர்த்த நெறிகளையுடைய காட்டில் நீ மிகவும் வருந்தினாய்

அதனால் இருள் நீங்க விடிவிளக்கு விளங்கும் வானை அளாவிய நம் மாளிகையில் தாழ்வான கரிய கூந்தலை உடைய காதலியின் சுணங்கு படர்ந்த அழகிய கொங்கையின் இன்பத்தைப் பாராட்டி நீண்ட மூங்கில் போன்ற அழகிய தோளையும் அணைந்து இனி மகிழ்ச்சி அடைவாயாக!” என்று வினைமுற்றி மீளும் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்

341. நீள் வழியைக் கடப்பளோ என் மகள்?

தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், உறு பெயல் ஒடு தேர் நனந்தலை,