பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


ஆதலால் பிறை போன்ற அவளது நெற்றியில் வியர்வை அரும்பியது. அவ் வியர்வைத் துளிகளை இங்கு வரும் காற்று ஆற்றுதற் பொருட்டு அந்த ஆடையைத் திறவாய் எனச் சொல்லி அவள் முகத்தைப் பார்க்கும் ஆவலுடன் அவ் வாடையைப் பற்றி இழுத்ததால் உறையினின்று உருவிய வாளைப் போன்று அவளது வடிவம் ஆடையினின்றும் விலகி நின்றது. -

அவள் தனது வடிவத்தை மறைக்கும் வகையை அறி யாதவள். ஆனாள். நாணமுற்றாள். ஆம்பல் மலரால் தொடுக்கப்பட்ட, தன் இடைக்குப் பகையான மாலையை அகற்றிப் பல விடுபூக்கள் செருகப்பட்ட கரிய கூந்தலை விரித்து இருண்ட போர்வையாகக் கொண்டு மறைத்தற்குரிய தன் உறுப்புகளை மறைத்து விரைவாக நாணங்கொண்டாள். வணங்கினாள். முன் நிகழ்ந்தது இது. அத்தகையவள் இன்று நாம் பலவற்றையும் சொல்லி உணர்த்தவும் உணராமல் ஊடல் கொள்கின்றாள். ஆதலால் இனி இவள் நமக்கு என்ன உறவினள்?” என உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

197. பாணனின் கூற்றை தலைவி மறுத்தல்

வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, மடக் கண் எருமை மாண் நாகு தழிஇ, படப்பை நண்ணிப், பழனத்து அல்கும் கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர் ஒள் இழை மகளிர் சேரிப், பல் நாள் இயங்கல் ஆனாத ஆயின்; வயங்கிழை யார்கொல் அளியள்தானே எம் போல் மாயப்பரத்தன் வாய்மொழி நம்பி வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரில் கண்பனி ஆகத்து உறைப்ப, கண்பசந்து ஆயமும் அயலும் மருளத் தாய்ஒம்பு ஆய்நலம் வேண்டாதோளே.

- உவர்க் கண்ணுTர்ப் புல்லங்கீரனார் அக 146