பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் வடி தீண்ட, வாய் விடுஉம் வயல் அணி நல் ஊர! கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யான் அழ, பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோபேணான் என்று உடன்றவர் உதிர் செய்த வடுவினான், மேல்நாள், நின் தோள் சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை? நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர் ஆடைகொண்டுஒலிக்கும்,நின்புலைத்திகாட்டுஎன்றாளோகூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில் ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை? வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோகளி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல் குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை? என ஆங்கு - செறிவுற்றேம், எம்மை நீ செறிய அறிவுற்று, அழிந்து உகு நெஞ்சத்தேம், அல்லல் உழப்ப; கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே, அழிந்து நிற்பேணிக் கொளலின் இழிந்ததோஇந் நோய் உழத்தல் எமக்கு? - கலி 72 இரட்டையாய்ச் சேர்ந்து உயர்ந்த நீலப்பட்டால் ஆன மெல்லிய படுக்கை, அது தன் துணையுடன் கூடிய அன்னப் பறவையின் தூவியால் மெல்லிய அணை. அதில் அமர்ந்து ஒருத்தி வெள்ளிக் கிண்ணத்தில் வார்க்கப்பட்ட பாலைச் சிறிது காட்டி அக் கிளியை உண்பிக்க அது அதை உண்ணாது போக, அஃது உண்பதற்குரிய சொற்களைச் சொல்லி உண்ணச் செய்து முத்தம் கொடுப்பவள். நீர்நிலையில் உள்ள புதிய நீரில் உள்ள பசுமையான புதர் மீது இடைவிடாது வரும் அலைகள் மோதுதலால் அதன் சிறு துளிகள் இடையிலே உள்ள தாமரை அரும்பு மீது வீசும் வண்டு நுகர அந்த அரும்பு மலராமல், கரையில் உள்ள மா மரத்தின் பிஞ்சு, மதியை நோக்கி மலரும் இயல்புடைய ஆம்பலின் வெண்மையான மலரை முதலில் தீண்டிப், பின் அத் தாமரை அரும்பைத்