பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


206 தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

உடையவள் அல்லள். வேனிற் காலத்துப் புதிய நீரைப் போல் எல்லார்க்கும் பயன்படும் உன் தந்தையை நொந்து கொள்பவர் இல்லை நமக்கு மேலாய்த் தன்னலம் பாடிப் பின் நம்மை இகழ்ந்து இத் தொடியை இவனுடைய கையில் இட்டவள் யாரோ அன்றோ தவறுடையேன்? எனத் தன்னுள் அழிந்து சொன்னாள் தலைவன் தலைவி கேட்ப,

242. பாலூட்டிய திறம் காலவை, கடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி. உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொலங் காழ், மேல் மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல் தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை. கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி. பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும் செறியக் கட்டி, ஈர் இடைத் தாழ்ந்த, பெய் புல மூதாய்ப்புகர் நிறத் துகிரின் மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்.

சூடின. இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ், மேல் கரும்பு ஆர் கண்ணிற்குச் சூழ் நூலாக, அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண, சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை. ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின் செலவு உறு திண் தேர்க் கொடுஞ் சினைக் கைப்பற்றிப் பைபயத் தூங்கும் நின் மெல் விரற் சீறடி நோதலும் உண்டு, ஈங்கு என் கை வந்தீ, செம்மால் நின் பால் உண்ணிய. பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத் தூண்டிலா விட்டுத் துடக்கி, தான் வேண்டியார்