பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


கின்ற வஞ்சிக்கொடி போன்ற இடையைத் தாங்கிக் கொண்டு அமைதி உண்டாகாத உணர்ச்சியால் அடி தளர்ந்து, வந்து சிலம்பு ஒலிக்கச் சினந்து பலகை பொருந்திய நின் கதவைப் பாய்ந்தாள். அது தவறு இல்லையா?

ஆராய்ந்த அணிகலன் உடையவள் ஆரவாரிக்கும் ஆர வாரத்தைக் கேட்டு அந்த ஆரவாரத்துக்கு எதிரே நீ காலம் நீட்டியாமல் எழுந்து சென்றது. அது தவறு ஆதற்குப் பொருந் துமோ? அவள் சினந்து அவ் இடத்திலேயே நின் மார்பில் கிடந்த மணக்கும் இதழையுடைய மாலையை அறுத்தாள்; அது தவறு இல்லையா? பின்பு அவளுடைய சிறிய அடியைச் சேர்ந்து நான் தீமை உடையவனல்லேன். நீ அறிவாய் எனச் சொல்லி அவளிடத்தே தங்கினை. அது தவறு ஆகாதா? இப் போது கூறு, நான் நின்னைச் சினக்க மாட்டேனா?

அதைக் கேட்ட தலைவன், “யான் தெளிவிக்கத் தெளிவு கொண்டாயாயின் இங்கு நான் நீ கூறக் கேட்ட தவற்றை யான் உடையவன் அல்லேன். இரவுக்காலத்து நீ கண்டது தான் கனவு போல இருந்தது” என்று சொன்னான்.

அதைக் கேட்ட தலைவி, “செறிந்த மழையான குளிர்ந்த துளியைப் பெய்கின்ற இரவுக் காலத்தில் ஒருவன் செய்த குறியிடத்தே வந்தவள் ஒருத்தியை நீ கண்டதனால் உனக்கு உண்டான கனவு இதுவாகும்” என்று சொல்லி, நீ செய்ததை நினையாமல் மறுத்துக் கூறி நிற்கின்றாய். அங்ஙனம் நின்று, பின் நீ உரைத்த பொய்யான சூள் உறவையும் உண்மையாக யாம் கண்டமையால், அது உனக்கு முன் போல் பயன் தரும் தன்மையைக் கொண்டது அன்று. ஆதலால் உனக்குச் சென்று புகக்கூடிய இல்லங்கள் பல உள்ளன. அங்குச் செல் வாயாக!” என்று சொன்னாள்.

அதைக் கேட்ட தலைவன், “மென்மையான தோளை யுடையவளே, இனி யான் செய்த குறையைக் கைவிட்டு உன் அழகை எனக்குத் தருவாய். அதை நான் நுகர்வேன்.” எனச் சொன்னான்.

“எம் வயத்ததாக நிறுத்த மாட்டாத நெஞ்சையுடைய யாம் உன் தீமையைப் பொறுக்க மாட்டோம் என்று எண்ணுவதைப் பெறுவோமா? பெறேம். ஆதலால், நீ இச்