பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

303


நின் மார்பும் ஒர் ஒத்த நீர்மைய கொல் என்னாமுன் தேடினாள் ஏசச் சில மகளிர் மற்று அதற்கு ஊடினார் வையை அகத்து சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க மைந்து உற்றாய் வெஞ் சொல் மட மயிற் சாயலை வந்திக்க வார் என மனத் தக்க நோய இது வேற்றாரை வேற்றர் தொழுதல் இளிவரவு போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று மாற்றாளை மாற்றாள் வரவு. அ. சொல் நல்லவை நாணாமல் தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆரப் பூண் வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல் தந்தானைத் தந்தே தருக்கு மாலை அணிய விலை தந்தான் மாதர் நின் கால சிலம்பும் கழற்றுவான் சால அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் கதுவாய் அவன் கள்வன் கள்வி நான் அல்லேன் என ஆங்கு வச்சிய மானே மறலினை மாற்ற உமக்கு நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே. சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால் காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் நிகழ்வது அறியாதுநில்லு நீ நல்லாய், மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர் அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் முடி பொருள் அன்று முனியல் கட வரை நிற்குமோ காமம் கொடி இயலாய். என ஆங்கு இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும் தென்னவன் வையைச் சிறப்பு