பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

பகைக்கு அச்சத்தை உண்டாக்குதற்குக் காரணமான கொல்லும் தொழிலையுடைய யானையையும் பருத்த தோளையுமுடைய பாண்டியன் அழகுடைய தன் மதுரையில் உள்ள மக்களுடன் வையையாற்றில் வரும் புது நீரில் ஆடிய தன்மைக்கு உவமையைச் சொல்லுமிடத்து பெருங்கடலால் சூழப்பட்ட இவ் உலகத்தில் உவமையைத் தேடினால் என்ன பயன்? இவ் உலகத்தில் ஒன்றும் உவமையாகாது. யானை மீது வரும் இந்திரன் ஊரில் வாழும் தேவர்கள் புடைசூழ வானில் உள்ள வான் கங்கையில் நீராடிய தன்மை யுடையது.