பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


தின் மேலேள்ள மயிலின் அடியைப் போன்ற இலையை உடைய கமழ் பூங்கொத்துகளைக் கொண்ட நொச்சியினது அழகு மிக்க மெல்லிய கொம்புகள் உதிர்ந்த நீல மணி போன்ற மலர்களின் ஒசையை மிகக் க்ேட்டுத் தூங்கினோம் இல்லை” என்று தோழி கூறினாள்.

123. எம் தெருவ்ே வாராதே!

மனை உறை கோழிக் குறுங் காற் பேடை, வேலி வெருகினம் மாலை உற்றெனப், புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழிஇய பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு இன்னாது இசைக்கும் அம்பலொடு வாரல், வாழியர் ஐய! எம் தெருவே.

- ஒக்கூர் மாசாத்தியார் குறு 139 ‘ஐயனே, இல்லின்கண் உறைகின்ற குறுகிய கால்களை உடைய கோழிப் பேடையானது, வேலிக்கு அயலில் உள்ள காட்டுப்பூனையின் கூட்டம் மாலைக் காலத்தில் வந்தடைய, அதற்கு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல் சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டுத் துன்பத்தை உடைய குஞ்சுகளாகிய இனத்தைக் கூவி அழைத்தாற் போல, துன்புறும்படி பரத்தையரால் கூறப்படும் பழிமொழியோடு எம்முடைய தெருவிற்கு வருதலை ஒழிவாயாக.நீவாழ்வாயாக! 124. வாள் போன்ற நாள் ‘குக்கூ என்றது கோழி, அதன் எதிர் துட்கென்றன்று என் தூய நெஞ்சம் - தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

- அள்ளுர் நன்முல்லை குறு 157 “கோழி ‘குக்கூ என்று கூவியது. அதற்கு நேராக எம் தோளைத் தழுவும் காதலரைப் பிரியச் செய்யும் வாளைப் போல விடியற்காலைப் பொழுது வந்தது. எனது தூய நெஞ்சம் அதனால் அச்சத்தை அடைந்தது” என்று தலைவி வருந்தியுரைத்தாள்.