பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

னர்களை ஒம்புவதில் கைவிடாமலிருப்பதால் அவரை எதிர்ப் படவில்லை. அதனால் யான் புலவாது உள்ளேன்.” என்று போற்றா ஒழுக்கமுற்று வந்த தலைவன் தோழியைத் துதுவிட அவளிடம் தலைவி இவ்வாறு கூறினாள். 171. வண்டு மகன் வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஒய்நடை முது பகடு ஆரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே, நீயே பெரு நலத்தையே, அவனே, ‘நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, தண்கமழ் புது மலர் ஊதும் வண்டு என மொழிப; மகன்’ என்னாரே.

- மதுரை மருதன் இளநாகனார் நற் 290 “முள்போன்ற கூரிய பற்களையுடையவளே! வயலிலே யுள்ள வெள்ளை நிறமான ஆம்பல் அறுபட்டுச் சூட்டில் உள்ளன. அப்போது மலர்ந்த புதிய ஆம்பற் பூவைக் கன்றை யுடைய புனிற்றா தின்னும் அது தின்ற மிச்சிலை ஒய்ந்த நடை யுள்ள முதிய காளைமாடு தின்னும். அவ்வாறாய ஊரை யுடைய தலைவன் தொடர்பை நீ விரும்பினால் என் சொல்லை ஏற்றுக் கொள்ளுக. நீயோ, பெருமை அடையக் கூடிய அழகை யுடையவள். அவனோ, “நிரம்பிய நீரையுடைய பொய்கையில் நள்ளிரவில் அடைந்து நறுமணமுள்ள புது மலரைத் தேனுக் காக ஊதும் வண்டு போன்றவன்” என்று உலகத்தார் சொல்லுவர். அவனை மகன் என்று சொல்லார். ஆதலால் நீ அவனிடம் புலவாதிருப்பாயாக’ என்று பரத்தை விறலியிடம் போலத் தலைவியின் ஊடலைத் தவிர்க்கக் கூறினாள்.

172. வேறுபட்ட செயல் சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்

மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு, உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்