உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 16 O லா. ச. ராமாமிருதம்

“நெற்றியில் கோடு விழாமல் இருந்தால் ரொம்ப ரொம்ப நன்றாகயிருப்பேன்”

என்னுடன் ஆமோதனையில் தலையைப் பலமாக ஆட்டினாள்.

“இன்னும் சற்று சதைப்பிடிப்பாயிருந்தால்- கழுத்து இவ்வளவு நீளமாக இல்லாமலிருந்தால்-”

தலை நிமிர்ந்து என்னைச் சந்தேகத்துடன் நோக்கினாள். நான் கேலி பண்ணுவது இப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது.

“உன் நிபந்தனைகள் இனிச் சாத்யமில்லை. அன்று, முதன் முதலாய் உன்னைப் பார்க்க இந்த அரண்மனைக்கு உன் தகப்பனார் என்னை அழைத்து வந்தபோதே தோன்றியிருக்கவேண்டும். தவிர- ”

“ஏன், நான் வாயத் திறந்தாலே என்னை வெட்டிக் கிணற்றில் போடக் காத்துண்டிருக்கேள்?”

அவள் இடைமறிப்பைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அதே மூச்சில் பேசிக்கொண்டே போனேன். எனக்கு லேசாய்த் திணறிற்று.

“- தவிர, இந்தக் 'கண்டிஷன்கள்' எல்லாம் எங்களுக்குத்தான். உங்களுக்குத்தான் ஒரு வயதுக்கப்புறம் வயது முழங்காலுக்குக் கீழ் நின்று விடுமே!”

அவளுக்குச் சிரிப்பு பீறிட்டது

“ஆமாம் உனக்குச் சிரிப்பாய்த்தானிருக்கும்.” எனக்கு, ஏன் இவ்வளவு எரிச்சல்? அவளைப் பார்க்கவே திடீரென்று வெறுப்பாயிருந்தது. மொழுமொழுவென்று அந்த உடல், பெரிதாய், சற்று மேட்டு விழிகள், சிரிப்பில் பளிரிடும் பல் வரிசை, மோவாய்க்குழியில் இயல்பாய் ஒரு மறு. மோவாய்க்கடியில் லேசாய் உருப்படர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு மோவாய்- கன்னக் கதுப்புகள்-.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/22&oldid=1125644" இலிருந்து மீள்விக்கப்பட்டது