பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அபிராமி அந்தாதி

அம்பிகை கருணையினால் உலகத்தவருக்கு அருள் அவதாரம் செய்ததையும் உமா என்ற திருநாமம் காட்டுகிறது. அவள் பல திருவவதாரங்களை எடுத்திருக்கிறாள். கண்ணனாக அவதரித்தவளும் அவளே என்று தேவி பாகவதம் கூறும், எந்த எந்தக் காலத்தில் எப்படி எப்படி அவதாரம் செய்ய வேண்டுமோ அப்படி அப்படி அவதரிப்பவள் தேவி பார்வதியாக எழுந்தருளியது அந்த, அவதாரங்கள் பலவற்றில் ஒன்று; பலராலும் போற்றப்பெறும் திருக்கோலம் அது.

இமயத்து அன்றும் பிறந்தவளே!

இமயத்திலே தோற்றியதையே பிறந்தவளே என்பதில் குறிப்பித்தார். தோற்றமுடைய பொருள்களுக்கு அழிவுண்டு. ஆகவே இவளுக்கும் அழிவுண்டோ என்று அறியாதவர்கள் ஐயுற இடங்கொடுத்து விட்டோமே!" என்று எண்ணினார்; உடனே,

அழியாத முத்தி ஆனந்தமே!

என்கிறார்.

முக்தி என்பது விடுதலை என்ற பொருளுடையது. பாசபந்தங்களினின்றும், மாயையினின்றும், பிறப்பு இறப்புகளினின்றும் விடுதலை பெறுவதே முக்தி, அது ஆனந்த மயமானது. அதைப் பேரானந்தம், பிரம்மானந்தம், சிவானந்தம், ஆத்மானந்தம், ஆனந்தம் என்று அடை கொடுத்தும் அடையின்றியும் சொல்வார்கள்.

இன்பம் துன்பம் என்ற இரண்டையும் நாம் நுகர்கிறோம். இன்பம் என்பது ஒளியானால் துன்பம் என்பது நிழலாகும். முத்தியின்பம் என்பது இந்த இரண்டில் ஒன்றான இன்பம் அன்று. சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தம் அது. இந்திரியங்களின் வாயிலாக நாம் நுகருவதையே இன்பம் என்றும் துன்பம் என்றும்