பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104
அபிராமி அந்தாதி

இப்பாடலில் உள்ளவரிகள் உணர்த்துகின்றன. அவளை முக்கரணத்தாலும் வழிபட்டு வாழ்வது அடியார்களின் கடமை.

நின்றும் இருந்தும் கிடந்தும் கடந்தும் கினைப்பது உன்னை என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்; எழு தாமறையின் ஒன்றும் அரும்பொரு ளே. அரு ளே, உமை யே இமயத்து அன்றும் பிறந்தவ ளே,அழி யாமுத்தி ஆனந்தமே!

[எழுதாமல் கேட்கப் படுகின்ற வேதத்தில் பொருந்தும் அரிய பொருளாக உள்ளவளே, அருளே வடிவாக உள்ளாய், அன்று இமாசலத்தில் பார்வதியாகத் திருவவதாரம் செய்தாய், அழியாத மோட்ச ஆனந்தமாக உள்ளவளே, அடியேன் நின்றபடியும் இருந்தபடியும் படுத்தப்படியும் நடந்தபடியும் தியானம் செய்வது உன்னையே. என்றைக்கும் தலைதாழ்த்து வணங்குவது உன் திருவடித் தாமரையையே.]

இருத்தல் - உட்கார்தல், உன்னையே என்ற ஏகாரம் தொக்கது. அன்றும்; உம்மை அசைநிலை, முன்னும் பின்னும் பல அவதாரங்கள் எடுத்ததுபோல அன்றும் அவதரித்தாய் என்று எச்ச உம்மையாகக் கொள்வதும் ஒன்று. அன்று: பண்டறி சுட்டு.]

அபிராமி அந்தாதியில் 10-ஆவது பாடல். இது.