பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின்தண்ணளி

தம்முடைய நிலையை மறந்து கீழ்நிலையில் உள்ளவர் களுக்கு உதவி புரிபவர்களைப் பெருங்கருணையாளர் என்று உலகம் பாராட்டும். பெரிய பணக்காரர் ஒருவர் ஏழை ஒருவன் வீட்டுக் கல்யாணம் விசாரிக்க வருகிறார். அப்போது அவருக்கு எல்லாருமே உபசாரம் செய்யத் தலைப்படுவார்கள். அது வரையிலும் மாப்பிள்ளையை யும் சம்பந்திகளையும் கவனித்துக் கொண்டு வந்த பெண் னின் தகப்பனார் வந்த செல்வரைக் கவனித்துக் கைகட்டி நிற்பார். சம்பந்திகள் கூட அவருக்கு மரியாதை செய்வார் கள், வந்த செல்வர் தாம்பூலம் வாங்கிக்கொண்டு போய் விடுவார். பிறகு வீட்டில் உள்ளவர்கள் யாவரும் அந்தப் பெரிய மனிதர் வந்துவிட்டுப் போனதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். கல்யாணம் ஆகிப் பல நாட்க ளான பிறகும், அந்தக் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், அந்தக் கல்யாணத்துக்கு அவர்கடிட வந்திருந்தார்' என்று செல்வர் வந்த நிகழ்ச்சியைச் சொல்வார்கள். பணக்காரர் ஏழை வீட்டுக்கு வராதவர் என்பது எல்லோரும் உறுதி செய்துவிட்ட உண்மை. அதை மாற்றி அவர் வந்துவிட்டார். இது பெருவியப்பு அல்லவா? மேலே போனவன் கீழே இறங்கி வந்த பெருங்கருணை

யல்லவா? -

இந்தச் சிறிய நிகழ்ச்சிக்கே உலகம் இந்தப் பாடு பட்டால் மிகப் பெரியவர்கள் ஏழைகளுக்கு எளியராக வந்து ஏதேனும் செய்தால் அதைக் கதையாக்கி வரலா |றாக்கி லட்சியமாக்கிப் போற்றுவதில் ஆச்சரியம் இல்லை.