பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காரமர் மேனிக் கணபதி

13

[மாலையாக அமைந்த கொன்றையையும் சண்பக மலர் மாலையையும் முறையே அணிந்த தில்லைப்பதியில் உள்ள பிரானாகிய நடராஜருக்கும், அவர்தம் பாகத்தில் எழுந்தருளிய உமாதேவிக்கும் உரிய மைந்தனே, மேகம் போன்ற கரிய திருமேனியை உடைய கணபதியே, உலகங்கள் ஏழையும் பெற்ற சிறப்பையுடைய அபிராமியம்மைக்கு அணியும் அந்தாதி எப்போதும் என் உள்ளத் துள்ளே நிற்கும்படியாக உரைத்தருள்வாயாக.

தார்-மார்பில் அணியும் மாலை. அமர்தல் பொருந்தி விளங்குதல். கொன்றை, சிவபிரானுடைய அடையாள மாலை. தாரமர் கொன்றை சாத்தும் தில்லையூரர் என்றும், சண்பகமாலை சாத்தும் உமையென்றும் நிரல்நிறையாகக் கூட்டிப் பொருள்கொள்ளவேண்டும். சாத்துதல்-அணிதல். எல்லாப் பிரபஞ்சங்களும் அம்பிகையிலிருந்து தோன்றியமையின், "உலகேழும் பெற்ற சீர் அபிராமி" என்றார். எப்போதும் என்றது இடைவிடாமல் என்ற பொருள் உடையது. சிந்தையுள்ளே அபிராமி அந்தாதிக்குரிய சொல் வளமும் பொருள் வளமும் உண்டாகவேண்டும் என்பதே கருத்து. கட்டுரைத்தல் -அடைவாகச் சொல்லுதல்.]

பூமாலை சாத்தும் பிராட்டிக்குப் பாமாலை சாத்தப் புகுகிறேன் என்ற நினைவில் முதலில் பூமாலையைச் சொன்னார். சர்வலோக ஜனனியாகிய அம்பிகையை வணங்கும் உரிமை யாவருக்கும் உண்டு. ஆதலின், "உலகேழும் பெற்ற சீர் அபிராமி" என்று கூறினார். "முதல் உரிமை உனக்குத்தான்; பின் உரிமையே எளியேங்களுக்கு" என்று உரைப்பாரைப்போல முதலில் உமை மைந்தனே என்றவர், 'உலகேழும் பெற்றமை' யைப் பின்பு கூறினார். தில்லையும், கடவூரும் மட்டும் அப்பெருமாட்டிக்கு உரியவை அல்ல, உலகம் ஏழுமே அவளுக்கு உரியன என்ற கருத்தும் இதில் குறிப்பாக உள்ளது. அந்தாதி பாடும்